Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௬௩

Qur'an Surah An-Nur Verse 63

ஸூரத்துந் நூர் [௨௪]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا تَجْعَلُوْا دُعَاۤءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَاۤءِ بَعْضِكُمْ بَعْضًاۗ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًاۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖٓ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (النور : ٢٤)

lā tajʿalū
لَّا تَجْعَلُوا۟
(Do) not make
ஆக்கிவிடாதீர்கள்
duʿāa
دُعَآءَ
(the) calling
சாபத்தை
l-rasūli
ٱلرَّسُولِ
(of) the Messenger
தூதரின்
baynakum
بَيْنَكُمْ
among you
உங்களுக்கு மத்தியில்
kaduʿāi
كَدُعَآءِ
as (the) call
சபிப்பது போன்று
baʿḍikum
بَعْضِكُم
(of) some of you
உங்களில் சிலர்
baʿḍan
بَعْضًاۚ
(to) others
சிலரை
qad
قَدْ
Verily
திட்டமாக
yaʿlamu
يَعْلَمُ
Allah knows
நன்கறிவான்
l-lahu
ٱللَّهُ
Allah knows
அல்லாஹ்
alladhīna yatasallalūna
ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ
those who slip away
எவர்கள்/நழுவிச் செல்கிறார்கள்
minkum
مِنكُمْ
among you
உங்களில்
liwādhan
لِوَاذًاۚ
under shelter
மறைவாக
falyaḥdhari
فَلْيَحْذَرِ
So let beware
(அவர்கள்) உஷாராக இருக்கட்டும்
alladhīna yukhālifūna
ٱلَّذِينَ يُخَالِفُونَ
those who oppose
மாறுசெய்பவர்கள்
ʿan amrihi
عَنْ أَمْرِهِۦٓ
[from] his orders
அவருடைய கட்டளைக்கு
an tuṣībahum
أَن تُصِيبَهُمْ
lest befalls them
தங்களைஅடைவதை
fit'natun
فِتْنَةٌ
a trial
குழப்பம்
aw
أَوْ
or
அல்லது
yuṣībahum
يُصِيبَهُمْ
befalls them
தங்களை அடைவதை
ʿadhābun
عَذَابٌ
a punishment
தண்டனை
alīmun
أَلِيمٌ
painful
வலிதரும்

Transliteration:

La taj'aloo du'aaa'ar Rasooli bainakum kadu'aaa'i badikum ba'daa; qad ya'lamul laahul lazeena yatasallaloona minkum liwaazaa; fal yahzaril lazeena yukhaalifoona 'an amriheee an tuseebahum fitnatun aw yuseebahum 'azaabun aleem (QS. an-Nūr:63)

English Sahih International:

Do not make [your] calling of the Messenger among yourselves as the call of one of you to another. Already Allah knows those of you who slip away, concealed by others. So let those beware who dissent from his [i.e., the Prophet's] order, lest fitnah strike them or a painful punishment. (QS. An-Nur, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருதவேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம்முடைய தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவிவிடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு யாதொரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும். (ஸூரத்துந் நூர், வசனம் ௬௩)

Jan Trust Foundation

(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதரின் சாபத்தை உங்களில் சிலர் சிலரை சபிப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய சாபம் கண்டிப்பாக பலித்துவிடும்) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைவதை அல்லது வலிதரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும்.