Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௬௧

Qur'an Surah An-Nur Verse 61

ஸூரத்துந் நூர் [௨௪]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَأْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَاۤىِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗٓ اَوْ صَدِيْقِكُمْۗ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَأْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًاۗ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ࣖ (النور : ٢٤)

laysa
لَّيْسَ
Not is
இல்லை
ʿalā
عَلَى
on
மீது
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
the blind
குருடர்
ḥarajun
حَرَجٌ
any blame
குற்றம்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
on
மீது
l-aʿraji
ٱلْأَعْرَجِ
the lame
ஊனமுற்றவர்
ḥarajun
حَرَجٌ
any blame
குற்றம்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
on
மீது
l-marīḍi
ٱلْمَرِيضِ
the sick
நோயாளி
ḥarajun
حَرَجٌ
any blame
குற்றம்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
ʿalā
عَلَىٰٓ
on
மீது
anfusikum
أَنفُسِكُمْ
yourselves
உங்கள்
an takulū
أَن تَأْكُلُوا۟
that you eat
நீங்கள் உண்பது
min buyūtikum
مِنۢ بُيُوتِكُمْ
from your houses
உங்கள் இல்லங்களிலிருந்து
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
ābāikum
ءَابَآئِكُمْ
(of) your fathers
உங்கள் தந்தைகளின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
ummahātikum
أُمَّهَٰتِكُمْ
(of) your mothers
உங்கள் தாய்மார்களின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
ikh'wānikum
إِخْوَٰنِكُمْ
(of) your brothers
உங்கள் சகோதரர்களின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
akhawātikum
أَخَوَٰتِكُمْ
(of) your sisters
உங்கள் சகோதரிகளின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
aʿmāmikum
أَعْمَٰمِكُمْ
(of) your paternal uncles
உங்கள் தந்தையின் சகோதரர்களின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
ʿammātikum
عَمَّٰتِكُمْ
(of) your paternal aunts
உங்கள் மாமிகளின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
akhwālikum
أَخْوَٰلِكُمْ
(of) your maternal uncles
உங்கள் தாய்மாமன்களின்
aw
أَوْ
or
அல்லது
buyūti
بُيُوتِ
houses
இல்லங்களிலிருந்து
khālātikum
خَٰلَٰتِكُمْ
(of) your maternal aunts
உங்கள் தாயின் சகோதரிகளின்
aw
أَوْ
or
அல்லது
مَا
what
எந்த
malaktum
مَلَكْتُم
you possess
நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ
mafātiḥahu
مَّفَاتِحَهُۥٓ
its keys
அதன் சாவிகளை
aw
أَوْ
or
அல்லது
ṣadīqikum
صَدِيقِكُمْۚ
your friend
உங்கள் நண்பனின்
laysa
لَيْسَ
Not is
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
on you
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
any blame
குற்றம்
an takulū
أَن تَأْكُلُوا۟
that you eat
நீங்கள் உண்பது
jamīʿan
جَمِيعًا
together
நீங்கள் ஒன்றினைந்தவர்களாக
aw
أَوْ
or
அல்லது
ashtātan
أَشْتَاتًاۚ
separately
பிரிந்தவர்களாக
fa-idhā dakhaltum
فَإِذَا دَخَلْتُم
But when you enter
நீங்கள் நுழைந்தால்
buyūtan
بُيُوتًا
houses
இல்லங்களில்
fasallimū
فَسَلِّمُوا۟
then greet
சலாமை சொல்லுங்கள்
ʿalā
عَلَىٰٓ
[on]
மீது
anfusikum
أَنفُسِكُمْ
yourselves
உங்கள்
taḥiyyatan
تَحِيَّةً
a greeting
முகமனாகிய
min ʿindi l-lahi
مِّنْ عِندِ ٱللَّهِ
from from Allah
அல்லாஹ்விடமிருந்து
mubārakatan
مُبَٰرَكَةً
blessed
அருள்நிறைந்த
ṭayyibatan
طَيِّبَةًۚ
(and) good
நல்ல
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
Allah makes clear
தெளிவுபடுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
Allah makes clear
அல்லாஹ்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Verses
வசனங்களை
laʿallakum taʿqilūna
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
so that you may understand
நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக

Transliteration:

Laisa 'alal a'maa barajunw wa laa 'alal a'raji barajunw wa laa 'alal mareedi barajun wa laa 'alaa anfusikum an taakuloo mim buyootikum aw buyooti aabaaa'ikum aw buyooti ummahaatikum aw buyooti ikhwaanikum aw buyooti akhawaatikum aw buyooti a'maamikum aw buyooti 'ammaatikum aw buyooti akhwaalikum aw buyooti khaalaatikum aw maa malaktum mafaatihahooo aw sadeeqikum; laisa 'alaikum junaahun an taakuloo jamee'an aw ashtaata; fa izaa dakhaltum buyootan fasallimoo 'alaaa anfusikum tahiyyatam min 'indil laahi mubaarakatan taiyibah; kazaalika yubai yinul laahu lakumul Aayaati la'allakum ta'qiloon (QS. an-Nūr:61)

English Sahih International:

There is not upon the blind [any] constraint nor upon the lame constraint nor upon the ill constraint nor upon yourselves when you eat from your [own] houses or the houses of your fathers or the houses of your mothers or the houses of your brothers or the houses of your sisters or the houses of your father's brothers or the houses of your father's sisters or the houses of your mother's brothers or the houses of your mother's sisters or [from houses] whose keys you possess or [from the house] of your friend. There is no blame upon you whether you eat together or separately. But when you enter houses, give greetings of peace upon each other – a greeting from Allah, blessed and good. Thus does Allah make clear to you the verses [of ordinance] that you may understand. (QS. An-Nur, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான ("ஸலாமுன்" என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! (ஸூரத்துந் நூர், வசனம் ௬௧)

Jan Trust Foundation

(முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குருடர் மீது குற்றம் இல்லை, ஊனமுற்றவர் மீது குற்றம் இல்லை, நோயாளி மீது குற்றம் இல்லை, உங்கள் மீது குற்றம் இல்லை - நீங்கள் உங்கள் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தந்தைகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாய்மார்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் மாமிகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாய்மாமன்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாயின் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து அல்லது எந்த இல்லத்தின் சாவிகளை நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ அதிலிருந்து அல்லது உங்கள் நண்பனின் இல்லங்களிலிருந்து நீங்கள் உண்பது (உங்கள் மீது குற்றமில்லை). நீங்கள் ஒன்றினைந்தவர்களாக அல்லது பிரிந்தவர்களாக (தனித்தனியாக) உண்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (உங்கள் அல்லது பிறருடைய) இல்லங்களில் நுழைந்தால் உங்களுக்கு (அங்குள்ள உங்கள் சகோதரர்களுக்கு) -அல்லாஹ்விடமிருந்து (கற்பிக்கப்பட்ட) அருள்நிறைந்த நல்ல முகமனாகிய- சலாமை சொல்லுங்கள். நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு வசனங்களை தெளிவுபடுத்துகிறான்.