Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௬௦

Qur'an Surah An-Nur Verse 60

ஸூரத்துந் நூர் [௨௪]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاۤءِ الّٰتِيْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجٰتٍۢ بِزِيْنَةٍۗ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ (النور : ٢٤)

wal-qawāʿidu
وَٱلْقَوَٰعِدُ
And postmenopausal
வயது முதிர்ந்தவர்கள்
mina l-nisāi
مِنَ ٱلنِّسَآءِ
among the women
பெண்களில்
allātī lā yarjūna
ٱلَّٰتِى لَا يَرْجُونَ
who (do) not have desire
ஆசைப்படாதவர்கள்
nikāḥan
نِكَاحًا
(for) marriage
திருமணத்தை
falaysa
فَلَيْسَ
then not is
இல்லை
ʿalayhinna
عَلَيْهِنَّ
on them
அவர்கள் மீது
junāḥun
جُنَاحٌ
any blame
குற்றம்
an yaḍaʿna
أَن يَضَعْنَ
that they put aside
அவர்கள் கழட்டுவதில்
thiyābahunna
ثِيَابَهُنَّ
their (outer) garments
அவர்களின் துப்பட்டாக்களை
ghayra mutabarrijātin
غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ
not displaying
வெளியே வராமல்
bizīnatin
بِزِينَةٍۖ
their adornment
அலங்காரங்களுடன்
wa-an yastaʿfif'na
وَأَن يَسْتَعْفِفْنَ
And that they modestly refrain
அவர்கள் பேணுதலாக இருப்பது
khayrun
خَيْرٌ
(is) better
சிறந்தது
lahunna
لَّهُنَّۗ
for them
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearer
நன்கு செவியேற்பவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Walqawaa'idu minan nisaaa'il laatee laa yarjoona nikaahan falisa 'alaihinna junaahun ai yada'na siyaabahunna ghaira mutabar rijaatim bizeenah; wa ai yasta'fifna khairul lahunn; wallaahu Samee'un 'Aleem (QS. an-Nūr:60)

English Sahih International:

And women of post-menstrual age who have no desire for marriage – there is no blame upon them for putting aside their outer garments [but] not displaying adornment. But to modestly refrain [from that] is better for them. And Allah is Hearing and Knowing. (QS. An-Nur, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதனையும் அவர்கள் தவிர்த்துக்கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துந் நூர், வசனம் ௬௦)

Jan Trust Foundation

மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் பேணுதலாக இருப்பது (-மேல் துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இருப்பது) அவர்களுக்கு சிறந்தது. அல்லாஹ் நன்கு செவியேற்பவன், நன்கறிந்தவன்.