Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௫௭

Qur'an Surah An-Nur Verse 57

ஸூரத்துந் நூர் [௨௪]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَأْوٰىهُمُ النَّارُۗ وَلَبِئْسَ الْمَصِيْرُ ࣖ (النور : ٢٤)

lā taḥsabanna
لَا تَحْسَبَنَّ
(Do) not think
எண்ணிவிடாதீர்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பாளர்களை
muʿ'jizīna fī l-arḍi
مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِۚ
(can) escape in the earth
பலவீனப்படுத்தி விடுபவர்களாக/இப்பூமியில்
wamawāhumu
وَمَأْوَىٰهُمُ
And their abode
இன்னும் அவர்கள் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
(will be) the Fire
நரகம்தான்
walabi'sa l-maṣīru
وَلَبِئْسَ ٱلْمَصِيرُ
and wretched is the destination
அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது

Transliteration:

Laa tahsabannal lazeena kafaroo mu'jizeena fil ard; wa maawaahumun Naaru wa labi'sal maseer (QS. an-Nūr:57)

English Sahih International:

Never think that the disbelievers are causing failure [to Allah] upon the earth. Their refuge will be the Fire – and how wretched the destination. (QS. An-Nur, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீங்கள் எண்ணவேண்டாம். (அவர்களைத் தண்டனைக்குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. (ஸூரத்துந் நூர், வசனம் ௫௭)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நிராகரிப்பாளர்களை இப்பூமியில் (அல்லாஹ்வை -அவன் அவர்களை அழிக்க நாடினால்-) பலவீனப்படுத்தி விடுபவர்களாக எண்ணி விடாதீர்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.