Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௫௩

Qur'an Surah An-Nur Verse 53

ஸூரத்துந் நூர் [௨௪]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّۗ قُلْ لَّا تُقْسِمُوْاۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ (النور : ٢٤)

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
And they swear
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
by Allah
அல்லாஹ்வின் மீது
jahda
جَهْدَ
strong
கடுமையாக
aymānihim
أَيْمَٰنِهِمْ
their oaths
அவர்களது சத்தியங்கள்
la-in amartahum
لَئِنْ أَمَرْتَهُمْ
that if you ordered them
நீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால்
layakhrujunna
لَيَخْرُجُنَّۖ
surely they (would) go forth
நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்
qul
قُل
Say
கூறுவீராக
lā tuq'simū
لَّا تُقْسِمُوا۟ۖ
"(Do) not swear
நீங்கள் சத்தியமிடாதீர்கள்
ṭāʿatun
طَاعَةٌ
Obedience
கீழ்ப்படிதலே
maʿrūfatun
مَّعْرُوفَةٌۚ
(is) known
அறியப்பட்ட
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
(is) All-Aware
ஆழ்ந்தறிபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do"
நீங்கள் செய்வதை

Transliteration:

Wa aqsamoo billaahi jahda aimaanihim la'in amartahum la yakhrujunna qul laa tuqsimoo taa'atum ma'roofah innal laaha khabeerum bimaa ta'maloon (QS. an-Nūr:53)

English Sahih International:

And they swear by Allah their strongest oaths that if you ordered them, they would go forth [in Allah's cause]. Say, "Do not swear. [Such] obedience is known. Indeed, Allah is [fully] Aware of that which you do." (QS. An-Nur, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்." (ஸூரத்துந் நூர், வசனம் ௫௩)

Jan Trust Foundation

இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி|) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது கடுமையாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தரிபவன் ஆவான்.