Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௮

Qur'an Surah An-Nur Verse 48

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا دُعُوْٓا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ (النور : ٢٤)

wa-idhā duʿū
وَإِذَا دُعُوٓا۟
And when they are called
அவர்கள் அழைக்கப்பட்டால்
ilā
إِلَى
to
பக்கம்
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
warasūlihi
وَرَسُولِهِۦ
and His Messenger
இன்னும் அவனது தூதரின்
liyaḥkuma
لِيَحْكُمَ
to judge
தீர்ப்பளிப்பதற்காக
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கிடையில்
idhā farīqun
إِذَا فَرِيقٌ
behold a party
அப்போது ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُم
of them
அவர்களில்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
(is) averse
புறக்கணிக்கின்றனர்

Transliteration:

Wa izaa du'ooo ilal laahi wa Rasoolihee li yahkuma bainahum izaa fareequm minhum mu'ridoon (QS. an-Nūr:48)

English Sahih International:

And when they are called to [the words of] Allah and His Messenger to judge between them, at once a party of them turns aside [in refusal]. (QS. An-Nur, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர். (ஸூரத்துந் நூர், வசனம் ௪௮)

Jan Trust Foundation

மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் பக்கம் அழைக்கப்பட்டால் - அவர்களுக்கிடையில் (அவனது தூதர்) தீர்ப்பளிப்பதற்காக - அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.