Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௩

Qur'an Surah An-Nur Verse 43

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِيْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَاۤءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُصِيْبُ بِهٖ مَنْ يَّشَاۤءُ وَيَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَاۤءُۗ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِ ۗ (النور : ٢٤)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் பார்க்கவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
that Allah
நிச்சயமாக அல்லாஹ்
yuz'jī
يُزْجِى
drives
ஓட்டிவருகிறான்
saḥāban
سَحَابًا
clouds
மேகங்களை
thumma
ثُمَّ
then
பிறகு
yu-allifu
يُؤَلِّفُ
joins
இணைக்கிறான்
baynahu
بَيْنَهُۥ
between them
அவற்றுக்கு இடையில்
thumma
ثُمَّ
then
பிறகு
yajʿaluhu
يَجْعَلُهُۥ
makes them
அவற்றை ஆக்குகிறான்
rukāman
رُكَامًا
(into) a mass
ஒன்றிணைக்கப்பட்டதாக
fatarā
فَتَرَى
then you see
ஆகவே பார்க்கிறீர்
l-wadqa
ٱلْوَدْقَ
the rain
மழை
yakhruju
يَخْرُجُ
come forth
வெளிவருவதை
min khilālihi
مِنْ خِلَٰلِهِۦ
from their midst?
அவற்றுக்கு இடையிலிருந்து
wayunazzilu
وَيُنَزِّلُ
And He sends down
அவன் இறக்குகிறான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from (the) sky
வானத்திலிருந்து
min jibālin
مِن جِبَالٍ
[from] mountains
மலைகளில்
fīhā
فِيهَا
within it
அதில் உள்ள
min baradin
مِنۢ بَرَدٍ
[of] (is) hail
பனியிலிருந்து
fayuṣību
فَيُصِيبُ
and He strikes
அவன் தண்டிக்கிறான்
bihi
بِهِۦ
with it
அதன் மூலம்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
தான் நாடியவரை
wayaṣrifuhu
وَيَصْرِفُهُۥ
and averts it
இன்னும் அதை திருப்பிவிடுகிறான்
ʿan
عَن
from
விட்டும்
man yashāu
مَّن يَشَآءُۖ
whom He wills
தான் நாடியவரை
yakādu sanā
يَكَادُ سَنَا
Nearly (the) flash
கடுமையான வெளிச்சம் ஆரம்பித்து விடுகிறது
barqihi
بَرْقِهِۦ
(of) its lighting
அதன் மின்னலின்
yadhhabu
يَذْهَبُ
takes away
பறித்துவிடும்
bil-abṣāri
بِٱلْأَبْصَٰرِ
the sight
பார்வைகளை

Transliteration:

Alam tara annal laaha yuzjee sahaaban summa yu'allifu bainahoo summa yaj'aluhoo rukaaman fataral wadqa yakhruju min khilaalihee wa yunazzilu minas samaaa'i min jibaalin feehaa mim barain fa yuseebu bihee mai yashaaa'u wa yasrifuhoo 'am mai yashaaa'u yakkaadu sanaa barqihee yazhabu bil absaar (QS. an-Nūr:43)

English Sahih International:

Do you not see that Allah drives clouds? Then He brings them together; then He makes them into a mass, and you see the rain emerge from within it. And He sends down from the sky, mountains [of clouds] within which is hail, and He strikes with it whom He wills and averts it from whom He wills. The flash of its lightning almost takes away the eyesight. (QS. An-Nur, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயமாக அல்லாஹ்தான் அடுக்குகின்றான் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்க வில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீங்கள் காண்கிறீர்கள். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கின்றான். அதனை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதனைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலில் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கின்றது. (ஸூரத்துந் நூர், வசனம் ௪௩)

Jan Trust Foundation

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் பார்க்கவில்லையா!? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை ஓட்டிவருகிறான். பிறகு அவற்றுக்கு இடையில் இணைக்கிறான், பிறகு அவற்றை ஒன்றிணைக்கப்பட்டதாக ஆக்குகிறான். ஆகவே, அவற்றுக்கு இடையில் இருந்து மழை வெளிவருவதை நீர் பார்க்கிறீர். வானத்திலிருந்து, அதில் உள்ள பனி மலைகளில் இருந்து அவன் (நீரை, ஆலங்கட்டிகளை) இறக்குகிறான். அதன் மூலம் தான் நாடியவரை அவன் தண்டிக்கிறான். தான் நாடியவரை விட்டும் அவன் அதை திருப்பிவிடுகிறான். அதன் மின்னலின் கடுமையான வெளிச்சம் பார்வைகளை பறித்துவிட ஆரம்பித்து விடுகிறது.