குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௧
Qur'an Surah An-Nur Verse 41
ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰۤفّٰتٍۗ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ (النور : ٢٤)
- alam tara
- أَلَمْ تَرَ
- Do not you see
- நீர் பார்க்கவில்லையா?
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah -
- அல்லாஹ்வை
- yusabbiḥu
- يُسَبِّحُ
- glorify
- துதிக்கின்றனர்
- lahu
- لَهُۥ
- Him
- அவனை
- man fī l-samāwāti
- مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
- whoever (is) in the heavens
- வானத்தில் உள்ளவர்களும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமியில்
- wal-ṭayru
- وَٱلطَّيْرُ
- and the birds
- பறவைகளும்
- ṣāffātin
- صَٰٓفَّٰتٍۖ
- (with) wings outspread?
- வரிசையாக பறக்கின்ற
- kullun
- كُلٌّ
- Each one
- ஒவ்வொருவரும்
- qad
- قَدْ
- verily
- திட்டமாக
- ʿalima
- عَلِمَ
- knows
- அறிந்துள்ளனர்
- ṣalātahu
- صَلَاتَهُۥ
- its prayer
- அவனை தொழுவதையும்
- watasbīḥahu
- وَتَسْبِيحَهُۥۗ
- and its glorification
- அவனை துதிப்பதையும்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- bimā yafʿalūna
- بِمَا يَفْعَلُونَ
- of what they do
- அவர்கள் செய்வதை
Transliteration:
Alam tara annal laaha yusabbihu lahoo man fissamaawaati wal ardi wat tairu saaaffaatim kullun qad 'alima Salaatahoo wa tasbeehah; wallaahu 'aleemum bimaa yaf'aloon(QS. an-Nūr:41)
English Sahih International:
Do you not see that Allah is exalted by whomever is within the heavens and the earth and [by] the birds with wings spread [in flight]? Each [of them] has known his [means of] prayer and exalting [Him], and Allah is Knowing of what they do. (QS. An-Nur, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீங்கள் காண வில்லையா? இவை யாவும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவைகள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான். (ஸூரத்துந் நூர், வசனம் ௪௧)
Jan Trust Foundation
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ்வை வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கின்றனர். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.