Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪

Qur'an Surah An-Nur Verse 4

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَأْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَاۤءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًاۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ (النور : ٢٤)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
yarmūna
يَرْمُونَ
accuse
ஏசுவார்களோ
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
the chaste women
பத்தினிகளை
thumma
ثُمَّ
then
பிறகு
lam yatū
لَمْ يَأْتُوا۟
not they bring
அவர்கள் கொண்டுவரவில்லை என்றால்
bi-arbaʿati
بِأَرْبَعَةِ
four
நான்கு
shuhadāa
شُهَدَآءَ
witnesses
சாட்சிகளை
fa-ij'lidūhum
فَٱجْلِدُوهُمْ
then flog them
அடியுங்கள் அவர்களை
thamānīna
ثَمَٰنِينَ
(with) eighty
எண்பது
jaldatan
جَلْدَةً
lashe(s)
அடி
walā taqbalū
وَلَا تَقْبَلُوا۟
and (do) not accept
ஏற்காதீர்கள்
lahum
لَهُمْ
their
அவர்களின்
shahādatan
شَهَٰدَةً
testimony
சாட்சியத்தை
abadan
أَبَدًاۚ
ever
ஒருபோதும்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
And those they
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
(are) the defiantly disobedient
பாவிகள்

Transliteration:

Wallazeena yarmoonal muhsanaati summa lam yaatoo bi-arba'ati shuhadaaa'a fajlidoohum samaaneena jaldatanw wa laa taqbaloo lahum shahaadatan abadaa; wa ulaaa'ika humul faasiqoon (QS. an-Nūr:4)

English Sahih International:

And those who accuse chaste women and then do not produce four witnesses – lash them with eighty lashes and do not accept from them testimony ever after. And those are the defiantly disobedient, (QS. An-Nur, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள். (ஸூரத்துந் நூர், வசனம் ௪)

Jan Trust Foundation

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் பத்தினிகளை (விபசாரிகள் என்று) ஏசுவார்களோ, பிறகு அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டுவரவில்லை என்றால் அவர்களை எண்பது அடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்).