Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௯

Qur'an Surah An-Nur Verse 39

ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ كَفَرُوْٓا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَاۤءًۗ حَتّٰٓى اِذَا جَاۤءَهٗ لَمْ يَجِدْهُ شَيْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ۗ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ (النور : ٢٤)

wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
But those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
their deeds
அவர்களுடைய செயல்கள்
kasarābin
كَسَرَابٍۭ
(are) like a mirage
கானல்நீர் போலாகும்
biqīʿatin
بِقِيعَةٍ
in a lowland
வெட்ட வெளியில்
yaḥsabuhu
يَحْسَبُهُ
thinks it
அதை எண்ணுகிறார்
l-ẓamānu
ٱلظَّمْـَٔانُ
the thirsty one
தாகித்தவன்
māan
مَآءً
(to be) water
தண்ணீராக
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā jāahu
إِذَا جَآءَهُۥ
when he comes to it
அதனிடம் அவர் வந்தால்
lam yajid'hu
لَمْ يَجِدْهُ
not he finds it
அதை காணமாட்டார்
shayan
شَيْـًٔا
(to be) anything
ஏதும்
wawajada
وَوَجَدَ
but he finds
காண்பார்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ʿindahu
عِندَهُۥ
before him
அதனிடம்
fawaffāhu
فَوَفَّىٰهُ
He will pay him in full
அவன் அவருக்கு நிறைவேற்றுவான்
ḥisābahu
حِسَابَهُۥۗ
his due
அவருடைய கணக்கை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
(is) swift
மிகத் தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
(in) the account
கேள்வி கணக்கு கேட்பதில்

Transliteration:

Wallazeena kafarooo a'maaluhum kasaraabim biqee'atiny yahsabuhuz zamaanu maaa'an hattaaa izaa jaaa'ahoo lam yajid hu shai'anw wa wajadal laaha 'indahoo fa waffaahu hisaabah; wallaahu saree'ul hisaab (QS. an-Nūr:39)

English Sahih International:

But those who disbelieved – their deeds are like a mirage in a lowland which a thirsty one thinks is water until, when he comes to it, he finds it is nothing but finds Allah before him, and He will pay him in full his due; and Allah is swift in account. (QS. An-Nur, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர் களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதனைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கின்றான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன். (ஸூரத்துந் நூர், வசனம் ௩௯)

Jan Trust Foundation

அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்கள் அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். அதை (தாகித்தவர்) தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை ஏதும் காணமாட்டார். அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். அவன் அவருடைய கணக்கை அவருக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான். கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.