Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௭

Qur'an Surah An-Nur Verse 37

ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رِجَالٌ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِيْتَاۤءِ الزَّكٰوةِ ۙيَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ (النور : ٢٤)

rijālun
رِجَالٌ
Men
பல ஆண்கள்
lā tul'hīhim
لَّا تُلْهِيهِمْ
not distracts them
அவர்களை திசை திருப்பி விடாது
tijāratun
تِجَٰرَةٌ
trade
வர்த்தகமோ
walā bayʿun
وَلَا بَيْعٌ
and not sale
விற்பனையோ
ʿan dhik'ri
عَن ذِكْرِ
from (the) remembrance of Allah
நினைவை விட்டும்
l-lahi
ٱللَّهِ
(the) remembrance of Allah
அல்லாஹ்வின்
wa-iqāmi
وَإِقَامِ
and (from) establishing
இன்னும் நிலைநிறுத்துவதை
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
the prayer
தொழுகையை
waītāi l-zakati
وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِۙ
and giving zakah
இன்னும் அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை
yakhāfūna
يَخَافُونَ
They fear
அவர்கள் பயப்படுவார்கள்
yawman
يَوْمًا
a Day
ஒரு நாளை
tataqallabu fīhi
تَتَقَلَّبُ فِيهِ
will turn about therein
தடுமாறும்/அதில்
l-qulūbu
ٱلْقُلُوبُ
the hearts
உள்ளங்களும்
wal-abṣāru
وَٱلْأَبْصَٰرُ
and the eyes
பார்வைகளும்

Transliteration:

Rinjaalul laa tulheehim tijaaratunw wa laa bai'un 'an zikril laahi wa iqaamis Salaati wa eetaaa'iz Zakaati yakkhaafoona Yawman tataqallabu feehil quloobu wal absaar (QS. an-Nūr:37)

English Sahih International:

[Are] men whom neither commerce nor sale distracts from the remembrance of Allah and performance of prayer and giving of Zakah. They fear a Day in which the hearts and eyes will [fearfully] turn about. (QS. An-Nur, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(அதில்) பலர் இருக்கின்றனர். (அவர்கள் எத்தகைய வரென்றால்) அவர்களுடைய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பி விடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறி விடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (ஸூரத்துந் நூர், வசனம் ௩௭)

Jan Trust Foundation

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பல ஆண்கள் (அங்கு தொழுகின்றனர்.) வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் (வழிபாட்டை) அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை விட்டும் அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்.