குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௬
Qur'an Surah An-Nur Verse 36
ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ يُسَبِّحُ لَهٗ فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۙ (النور : ٢٤)
- fī buyūtin
- فِى بُيُوتٍ
- In houses
- இறை இல்லங்களில்
- adhina
- أَذِنَ
- (which) Allah ordered
- அனுமதித்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- (which) Allah ordered
- அல்லாஹ்
- an tur'faʿa
- أَن تُرْفَعَ
- that they be raised
- அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கு
- wayudh'kara
- وَيُذْكَرَ
- and be mentioned
- இன்னும் நினைவு கூறப்படுவதற்கும்
- fīhā
- فِيهَا
- in them
- அவற்றில்
- us'muhu
- ٱسْمُهُۥ
- His name
- அவனது திருப்பெயர்
- yusabbiḥu
- يُسَبِّحُ
- Glorify
- துதிக்கின்றனர்
- lahu
- لَهُۥ
- [to] Him
- அவனை
- fīhā
- فِيهَا
- in them
- அவற்றில்
- bil-ghuduwi
- بِٱلْغُدُوِّ
- in the mornings
- காலையிலும்
- wal-āṣāli
- وَٱلْءَاصَالِ
- and (in) the evenings
- மாலையிலும்
Transliteration:
Fee buyootin azinal laahu an turfa'a wa yuzkara feehasmuhoo yusabbihu lahoo feehaa bilghuduwwi wal aasaal(QS. an-Nūr:36)
English Sahih International:
[Such niches are] in houses [i.e., mosques] which Allah has ordered to be raised and that His name be mentioned [i.e., praised] therein; exalting Him within them in the morning and the evenings (QS. An-Nur, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
(அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகளில் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் கூறவும், அதைக் கண்ணியப் படுத்தும்படியும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு, (ஸூரத்துந் நூர், வசனம் ௩௬)
Jan Trust Foundation
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் (-மஸ்ஜிதுகளில் எரிக்கப்படுகிறது). அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது திருப்பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (பல ஆண்கள்) அவனை துதிக்கின்றனர் (-தொழுகின்றனர்)