Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௨

Qur'an Surah An-Nur Verse 32

ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَاۤىِٕكُمْۗ اِنْ يَّكُوْنُوْا فُقَرَاۤءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ (النور : ٢٤)

wa-ankiḥū
وَأَنكِحُوا۟
And marry
நீங்கள் திருமணம் செய்து வையுங்கள்
l-ayāmā
ٱلْأَيَٰمَىٰ
the single
ஜோடி இல்லாதவர்களுக்கு
minkum
مِنكُمْ
among you
உங்களில்
wal-ṣāliḥīna
وَٱلصَّٰلِحِينَ
and the righteous
நல்லவர்களுக்கு
min
مِنْ
among
ஆண் அடிமைகளிலும்
ʿibādikum
عِبَادِكُمْ
your male slaves
ஆண் அடிமைகளிலும் உங்கள்
wa-imāikum
وَإِمَآئِكُمْۚ
and your female slaves
உங்கள் பெண் அடிமைகளிலும்
in yakūnū
إِن يَكُونُوا۟
If they are
அவர்கள் இருந்தால்
fuqarāa
فُقَرَآءَ
poor
ஏழைகளாக
yugh'nihimu
يُغْنِهِمُ
Allah will enrich them
அவர்களை நிறைவுறச் செய்வான்
l-lahu
ٱللَّهُ
Allah will enrich them
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۗ
from His Bounty
தனது அருளால்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
(is) All-Encompassing
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Wa ankihul ayaamaa minkum was saaliheena min 'ibaadikum wa imaa'kum; iny-yakoonoo fuqaraaa'a yughni himul laahu min fadlih; wal laahu Waasi'un 'Aleem (QS. an-Nūr:32)

English Sahih International:

And marry the unmarried among you and the righteous among your male slaves and female slaves. If they should be poor, Allah will enrich them from His bounty, and Allah is all-Encompassing and Knowing. (QS. An-Nur, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துந் நூர், வசனம் ௩௨)

Jan Trust Foundation

இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் ஜோடி இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.