Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௧

Qur'an Surah An-Nur Verse 31

ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّۖ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَاۤىِٕهِنَّ اَوْ اٰبَاۤءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَاۤىِٕهِنَّ اَوْ اَبْنَاۤءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِيْٓ اِخْوَانِهِنَّ اَوْ بَنِيْٓ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَاۤىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التَّابِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَاۤءِ ۖوَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّۗ وَتُوْبُوْٓا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ (النور : ٢٤)

waqul
وَقُل
And say
கூறுங்கள்
lil'mu'mināti
لِّلْمُؤْمِنَٰتِ
to the believing women
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு
yaghḍuḍ'na
يَغْضُضْنَ
(that) they should lower
அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
min
مِنْ
[of]
பார்வைகளை
abṣārihinna
أَبْصَٰرِهِنَّ
their gaze
பார்வைகளை தங்கள்
wayaḥfaẓna
وَيَحْفَظْنَ
and they should guard
இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
furūjahunna
فُرُوجَهُنَّ
their chastity
தங்கள் மறைவிடங்களை
walā yub'dīna
وَلَا يُبْدِينَ
and not (to) display
இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
zīnatahunna
زِينَتَهُنَّ
their adornment
தங்கள் அலங்காரங்களை
illā mā ẓahara
إِلَّا مَا ظَهَرَ
except what is apparent
வெளியில் தெரிபவற்றை தவிர
min'hā
مِنْهَاۖ
of it
அதிலிருந்து
walyaḍrib'na
وَلْيَضْرِبْنَ
And let them draw
இன்னும் அவர்கள் போர்த்திக் கொள்ளட்டும்
bikhumurihinna
بِخُمُرِهِنَّ
their head covers
தங்கள் முந்தானைகளை
ʿalā juyūbihinna
عَلَىٰ جُيُوبِهِنَّۖ
over their bosoms
தங்கள் நெஞ்சுப் பகுதிகள் மீது
walā yub'dīna
وَلَا يُبْدِينَ
and not (to) display
இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
zīnatahunna
زِينَتَهُنَّ
their adornment
தங்கள் அலங்காரங்களை
illā libuʿūlatihinna
إِلَّا لِبُعُولَتِهِنَّ
except to their husbands
தங்கள் கணவர்களுக்கு தவிர
aw
أَوْ
or
அல்லது
ābāihinna
ءَابَآئِهِنَّ
their fathers
தங்கள்தந்தைகளுக்கு
aw
أَوْ
or
அல்லது
ābāi
ءَابَآءِ
fathers
தந்தைகளுக்கு
buʿūlatihinna
بُعُولَتِهِنَّ
(of) their husbands
தங்கள் கணவர்களின்
aw
أَوْ
or
அல்லது
abnāihinna
أَبْنَآئِهِنَّ
their sons
தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு
aw
أَوْ
or
அல்லது
abnāi
أَبْنَآءِ
sons
ஆண் பிள்ளைகளுக்கு
buʿūlatihinna
بُعُولَتِهِنَّ
(of) their husbands
தங்கள் கணவர்களின்
aw
أَوْ
or
அல்லது
ikh'wānihinna
إِخْوَٰنِهِنَّ
their brothers
தங்கள் சகோதரர்களுக்கு
aw
أَوْ
or
அல்லது
banī
بَنِىٓ
sons
ஆண் பிள்ளைகளுக்கு
ikh'wānihinna
إِخْوَٰنِهِنَّ
(of) their brothers
தங்கள் சகோதரர்களின்
aw
أَوْ
or
அல்லது
banī
بَنِىٓ
sons
ஆண் பிள்ளைகளுக்கு
akhawātihinna
أَخَوَٰتِهِنَّ
(of) their sisters
தங்கள் சகோதரிகளின்
aw
أَوْ
or
அல்லது
nisāihinna
نِسَآئِهِنَّ
their women
தங்கள் பெண்களுக்கு
aw mā malakat
أَوْ مَا مَلَكَتْ
or what possess
அல்லது/சொந்தமாக்கியவர்களுக்கு
aymānuhunna
أَيْمَٰنُهُنَّ
their right hands
தங்கள் வலக்கரங்கள்
awi
أَوِ
or
அல்லது
l-tābiʿīna
ٱلتَّٰبِعِينَ
the attendants
பணியாளர்களுக்கு
ghayri ulī l-ir'bati
غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ
having no physical desire having no physical desire having no physical desire
ஆசையில்லாத
mina l-rijāli
مِنَ ٱلرِّجَالِ
among [the] men
ஆண்களில்
awi
أَوِ
or
அல்லது
l-ṭif'li
ٱلطِّفْلِ
[the] children
சிறுவர்களுக்கு
alladhīna lam yaẓharū
ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟
who (are) not aware
எவர்கள்/அறிவில்லை
ʿalā ʿawrāti
عَلَىٰ عَوْرَٰتِ
of private aspects
மறைவிடங்களை
l-nisāi
ٱلنِّسَآءِۖ
(of) the women
பெண்களின்
walā yaḍrib'na
وَلَا يَضْرِبْنَ
And not let them stamp
இன்னும் அவர்கள் தட்டி நடக்க வேண்டாம்
bi-arjulihinna
بِأَرْجُلِهِنَّ
their feet
தங்கள் கால்களை
liyuʿ'lama
لِيُعْلَمَ
to make known
அறியப்படுவதற்காக
mā yukh'fīna
مَا يُخْفِينَ
what they conceal
எதை/மறைக்கின்றனர்
min zīnatihinna
مِن زِينَتِهِنَّۚ
of their adornment
தங்கள் அலங்காரங்களை
watūbū
وَتُوبُوٓا۟
And turn
இன்னும் பாவமன்னிப்பு கோருங்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
jamīʿan
جَمِيعًا
altogether
அனைத்திற்கும்
ayyuha l-mu'minūna
أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ
O believers! O believers!
நம்பிக்கையாளர்களே
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
So that you may succeed
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Transliteration:

Wa qul lilmu'minaati yaghdudna min absaarihinna wa yahfazna furoojahunna wa laa yubdeena zeenatahunna illaa maa zahara minhaa walyadribna bikhumurihinna 'alaa juyoobihinna wa laa yubdeena zeenatahunna illaa libu'oolatihinna aw aabaaa'i hinna aw aabaaa'i bu'oolati hinna aw abnaaa'ihinaa aw abnaaa'i bu'oolatihinnna aw ikhwaanihinnna aw baneee ikhwaanihinna aw banee akhawaatihinna aw nisaaa'i hinna aw maa malakat aimaanuhunna awit taabi'eena ghairi ilil irbati minar rijaali awit tiflillazeena lam yazharoo 'alaa 'awraatin nisaaa'i wala yadribnna bi arjulihinna min zeenatihinn; wa toobooo ilallaahi jammee'an aiyuhal mu'minoona la'allakum tuflihoon (QS. an-Nūr:31)

English Sahih International:

And tell the believing women to reduce [some] of their vision and guard their private parts and not expose their adornment except that which [necessarily] appears thereof and to wrap [a portion of] their headcovers over their chests and not expose their adornment [i.e., beauty] except to their husbands, their fathers, their husbands' fathers, their sons, their husbands' sons, their brothers, their brothers' sons, their sisters' sons, their women, that which their right hands possess [i.e., slaves], or those male attendants having no physical desire, or children who are not yet aware of the private aspects of women. And let them not stamp their feet to make known what they conceal of their adornment. And turn to Allah in repentance, all of you, O believers, that you might succeed. (QS. An-Nur, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள். (ஸூரத்துந் நூர், வசனம் ௩௧)

Jan Trust Foundation

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக| அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு அல்லது தங்கள் தந்தைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு அல்லது தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரர்களுக்கு அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் (இன முஸ்லிமான) பெண்களுக்கு அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு அல்லது ஆண்களில் ஆசையில்லாத பணியாளர்களுக்கு அல்லது பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. மற்ற மேல் கூறப்பட்டவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைக்கின்றவற்றை (மற்றவர்கள்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும் நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.