குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௦
Qur'an Surah An-Nur Verse 30
ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْۗ ذٰلِكَ اَزْكٰى لَهُمْۗ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَعُوْنَ (النور : ٢٤)
- qul
- قُل
- Say
- கூறுங்கள்
- lil'mu'minīna
- لِّلْمُؤْمِنِينَ
- to the believing men
- நம்பிக்கையாளர்களுக்கு
- yaghuḍḍū
- يَغُضُّوا۟
- they should lower
- அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
- min abṣārihim
- مِنْ أَبْصَٰرِهِمْ
- their gaze their gaze
- தங்கள் பார்வைகளை
- wayaḥfaẓū
- وَيَحْفَظُوا۟
- and they should guard
- இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
- furūjahum
- فُرُوجَهُمْۚ
- their chastity
- தங்கள் மறைவிடங்களை
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- azkā
- أَزْكَىٰ
- (is) purer
- மிக சுத்தமானது
- lahum
- لَهُمْۗ
- for them
- அவர்களுக்கு
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- khabīrun
- خَبِيرٌۢ
- (is) All-Aware
- ஆழ்ந்தறிந்தவன்
- bimā yaṣnaʿūna
- بِمَا يَصْنَعُونَ
- of what they do
- அவர்கள் செய்வதை
Transliteration:
Qul lilmu' mineena yaghuuddoo min absaarihim wa yahfazoo furoojahum; zaalika azkaa lahum; innallaaha khabeerum bimaa yasna'oon(QS. an-Nūr:30)
English Sahih International:
Tell the believing men to reduce [some] of their vision and guard their private parts. That is purer for them. Indeed, Allah is [fully] Aware of what they do. (QS. An-Nur, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான். (ஸூரத்துந் நூர், வசனம் ௩௦)
Jan Trust Foundation
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக| அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை (அல்லாஹ் வெறுப்பதை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிக சுத்தமானது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.