Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௯

Qur'an Surah An-Nur Verse 29

ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّكُمْۗ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ (النور : ٢٤)

laysa ʿalaykum
لَّيْسَ عَلَيْكُمْ
Not upon you
உங்கள் மீது இல்லை
junāḥun
جُنَاحٌ
(is) any blame
குற்றம்
an tadkhulū
أَن تَدْخُلُوا۟
that you enter
நீங்கள் நுழைவது
buyūtan
بُيُوتًا
houses
வீடுகளில்
ghayra maskūnatin
غَيْرَ مَسْكُونَةٍ
not inhabited
வசிக்கப்படாத
fīhā
فِيهَا
in it
அவற்றில்
matāʿun
مَتَٰعٌ
(is) a provision
பொருள்
lakum
لَّكُمْۚ
for you
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிவான்
mā tub'dūna
مَا تُبْدُونَ
what you reveal
நீங்கள்வெளிப்படுத்துவதை
wamā taktumūna
وَمَا تَكْتُمُونَ
and what you conceal
நீங்கள் மறைப்பதை

Transliteration:

Laisa 'alaikum junaahun ann tadkhuloo buyootan ghaira maskoonatin feeha mataa'ul lakum; wallaahu ya'lamu maa tubdoona wa maa taktumoon (QS. an-Nūr:29)

English Sahih International:

There is no blame upon you for entering houses not inhabited in which there is convenience for you. And Allah knows what you reveal and what you conceal. (QS. An-Nur, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத யாதொரு வீட்டில் உங்களுடைய சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துந் நூர், வசனம் ௨௯)

Jan Trust Foundation

(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வசிக்கப்படாத வீடுகளில் -அவற்றில் உங்களுக்கு பொருள் இருந்து -நீங்கள் நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் நன்கறிவான்.