குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௯
Qur'an Surah An-Nur Verse 19
ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ (النور : ٢٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna yuḥibbūna
- ٱلَّذِينَ يُحِبُّونَ
- those who like
- விரும்பக்கூடியவர்கள்
- an tashīʿa
- أَن تَشِيعَ
- that (should) spread
- பரவுவதை
- l-fāḥishatu
- ٱلْفَٰحِشَةُ
- the immorality
- அசிங்கமான செயல்
- fī alladhīna āmanū
- فِى ٱلَّذِينَ ءَامَنُوا۟
- among those who believe
- நம்பிக்கையாளர்களுக்கிடையில்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- தண்டனை
- alīmun
- أَلِيمٌ
- painful
- வலி தரக்கூடிய
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இம்மையிலும்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِۚ
- and the Hereafter
- மறுமையிலும்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்தான்
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- அறிவான்
- wa-antum
- وَأَنتُمْ
- while you
- நீங்கள்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- (do) not know
- அறியமாட்டீர்கள்
Transliteration:
Innal lazeena yuhibboona an tashee'al faahishatu fil lazeena aamanoo lahum 'azaabun aleemun fid dunyaa wal Aakhirah; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon(QS. an-Nūr:19)
English Sahih International:
Indeed, those who like that immorality should be spread [or publicized] among those who have believed will have a painful punishment in this world and the Hereafter. And Allah knows and you do not know. (QS. An-Nur, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக் கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஸூரத்துந் நூர், வசனம் ௧௯)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அசிங்கமான செயல் நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை விரும்பக்கூடியவர்கள் -அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வலி தரக்கூடிய தண்டனை உண்டு. அல்லாஹ்தான் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.