குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௬
Qur'an Surah An-Nur Verse 16
ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْلَآ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَنَآ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَاۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ (النور : ٢٤)
- walawlā
- وَلَوْلَآ
- And why not
- வேண்டாமா
- idh samiʿ'tumūhu
- إِذْ سَمِعْتُمُوهُ
- when you heard it
- அதை நீங்கள் கேட்டபோது
- qul'tum
- قُلْتُم
- you said
- நீங்கள் சொல்லியிருக்க
- mā yakūnu
- مَّا يَكُونُ
- "Not it is
- தகாது
- lanā
- لَنَآ
- for us
- எங்களுக்கு
- an natakallama
- أَن نَّتَكَلَّمَ
- that we speak
- நாங்கள் பேசுவது
- bihādhā
- بِهَٰذَا
- of this
- இதை
- sub'ḥānaka hādhā
- سُبْحَٰنَكَ هَٰذَا
- Glory be to You! This
- அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் / இது
- buh'tānun
- بُهْتَٰنٌ
- (is) a slander
- அபாண்டமான பேச்சு
- ʿaẓīmun
- عَظِيمٌ
- great?"
- பெரிய
Transliteration:
Wa law laaa iz sami'tu moohu qultum maa yakoonu lanaaa an natakallama bihaazaa Subhaanaka haaza buhtaanun 'azeem(QS. an-Nūr:16)
English Sahih International:
And why, when you heard it, did you not say, "It is not for us to speak of this. Exalted are You, [O Allah]; this is a great slander"? (QS. An-Nur, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
நீங்கள் இதனைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இத்தகைய விஷயத்தை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? (ஸூரத்துந் நூர், வசனம் ௧௬)
Jan Trust Foundation
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை நீங்கள் கேட்டபோது “இதை நாங்கள் பேசுவது எங்களுக்குத் தகாது, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சு” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!