Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௫

Qur'an Surah An-Nur Verse 15

ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَيْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًاۙ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ ۚ (النور : ٢٤)

idh
إِذْ
When
ஏனெனில்
talaqqawnahu
تَلَقَّوْنَهُۥ
you received it
அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள்
bi-alsinatikum
بِأَلْسِنَتِكُمْ
with your tongues
நீங்கள்உங்கள் நாவுகளால்
wataqūlūna
وَتَقُولُونَ
and you said
இன்னும் அதை கூறுகிறீர்கள்
bi-afwāhikum
بِأَفْوَاهِكُم
with your mouths
உங்கள் வாய்களால்
مَّا
what
எதைப் பற்றி
laysa lakum
لَيْسَ لَكُم
not for you
உங்களுக்கு இல்லையோ
bihi
بِهِۦ
of it
அதைக் கொண்டு
ʿil'mun
عِلْمٌ
any knowledge
அறிவு
wataḥsabūnahu
وَتَحْسَبُونَهُۥ
and you thought it
அதை கருதுகிறீர்கள்
hayyinan
هَيِّنًا
(was) insignificant
மிக இலகுவாக
wahuwa
وَهُوَ
while it
அதுவோ இருக்கிறது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
(was) near Allah (was) near Allah
அல்லாஹ்விடம்
ʿaẓīmun
عَظِيمٌ
great
மிகப்பெரியதாக

Transliteration:

iz talaqqawnahoo bi alsinatikum wa taqooloona bi afwaahikum maa laisa lakum bihee 'ilmunw wa tahsaboo nahoo haiyinanw wa huwa 'indl laahi 'azeem (QS. an-Nūr:15)

English Sahih International:

When you received it with your tongues and said with your mouths that of which you had no knowledge and thought it was insignificant while it was, in the sight of Allah, tremendous. (QS. An-Nur, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது. (ஸூரத்துந் நூர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும் உங்கள் வாய்களால் உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை கூறுகிறீர்கள், அதை மிக இலகுவாக கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.