குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௧
Qur'an Surah An-Nur Verse 11
ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ جَاۤءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْۗ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْۗ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْۗ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِۚ وَالَّذِيْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ (النور : ٢٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- jāū bil-if'ki
- جَآءُو بِٱلْإِفْكِ
- brought the lie
- இட்டுக்கட்டியவர்கள்
- ʿuṣ'batun
- عُصْبَةٌ
- (are) a group
- ஒரு குழுவினர்தான்
- minkum
- مِّنكُمْۚ
- among you
- உங்களில் உள்ள
- lā taḥsabūhu
- لَا تَحْسَبُوهُ
- (Do) not think it
- அதை கருதாதீர்கள்
- sharran
- شَرًّا
- bad
- தீமையாக
- lakum
- لَّكُمۖ
- for you
- உங்களுக்கு
- bal
- بَلْ
- nay
- மாறாக
- huwa
- هُوَ
- it
- அது
- khayrun
- خَيْرٌ
- (is) good
- நன்மைதான்
- lakum
- لَّكُمْۚ
- for you
- உங்களுக்கு
- likulli im'ri-in
- لِكُلِّ ٱمْرِئٍ
- For every person
- ஒவ்வொருவருக்கும்
- min'hum
- مِّنْهُم
- among them
- அவர்களில்
- mā ik'tasaba
- مَّا ٱكْتَسَبَ
- (is) what he earned
- அவர் செய்தது
- mina l-ith'mi
- مِنَ ٱلْإِثْمِۚ
- of the sin
- பாவத்தில்
- wa-alladhī tawallā
- وَٱلَّذِى تَوَلَّىٰ
- and the one who took upon himself a greater share of it
- செய்தவர்கள்
- kib'rahu
- كِبْرَهُۥ
- took upon himself a greater share of it
- பெரியதை
- min'hum
- مِنْهُمْ
- among them
- அதில்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- தண்டனை உண்டு
- ʿaẓīmun
- عَظِيمٌ
- great
- பெரும்
Transliteration:
Innal lazeena jaaa'oo bilifki 'usbatum minkum; laa tahsaboohu sharral lakum bal huwa khairul lakum; likul limri'im minhum mak tasaba minal-ism; wallazee tawallaa kibrahoo minhum lahoo 'azaabun 'azeem(QS. an-Nūr:11)
English Sahih International:
Indeed, those who came with falsehood are a group among you. Do not think it bad for you; rather, it is good for you. For every person among them is what [punishment] he has earned from the sin, and he who took upon himself the greater portion thereof – for him is a great punishment [i.e., Hellfire]. (QS. An-Nur, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தாம்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ணவேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொரு வருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக்கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு. (ஸூரத்துந் நூர், வசனம் ௧௧)
Jan Trust Foundation
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை (இட்டுக்கட்டிய செய்தியை) உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அது உங்களுக்கு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருக்கும் பாவத்தில் அவர் செய்தது (-அதன் தண்டனை) உண்டு. அவர்களில் அதில் பெரியதை செய்தவர் (-இட்டுக் கட்டுவதில் பெரும் பங்களிப்பு வகித்தவர்) அவருக்கு பெரும் தண்டனை உண்டு.