Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧

Qur'an Surah An-Nur Verse 1

ஸூரத்துந் நூர் [௨௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَآ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ (النور : ٢٤)

sūratun
سُورَةٌ
A Surah -
இது ஒரு அத்தியாயமாகும்
anzalnāhā
أَنزَلْنَٰهَا
We (have) sent it down
இதை நாம் இறக்கினோம்
wafaraḍnāhā
وَفَرَضْنَٰهَا
and We (have) made it obligatory
இதை நாம் கடமையாக்கினோம்
wa-anzalnā
وَأَنزَلْنَا
and We (have) revealed
இன்னும் நாம் இறக்கினோம்
fīhā
فِيهَآ
therein
இதில்
āyātin
ءَايَٰتٍۭ
Verses
அத்தாட்சிகளை
bayyinātin
بَيِّنَٰتٍ
clear
தெளிவான
laʿallakum tadhakkarūna
لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ
so that you may take heed
நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக

Transliteration:

Sooratun anzalnaahaa wa faradnaahaa wa anzalnaa feehaaa Aayaatim baiyinaatil la'allakum tazakkaroon (QS. an-Nūr:1)

English Sahih International:

[This is] a Surah which We have sent down and made [that within it] obligatory and revealed therein verses of clear evidence that you might remember. (QS. An-Nur, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதனை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். அன்றி, இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கி வைத்தோம். (ஸூரத்துந் நூர், வசனம் ௧)

Jan Trust Foundation

(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது ஒரு அத்தியாயமாகும். இதை நாம் இறக்கினோம். இதை (-இதில் உள்ள சட்டங்களை) நாம் கடமையாக்கினோம் (வகுத்தோம்). நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக இதில் தெளிவான அத்தாட்சிகளை நாம் இறக்கினோம்.