Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Page: 7

An-Nur

(an-Nūr)

௬௧

لَيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَأْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَاۤىِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗٓ اَوْ صَدِيْقِكُمْۗ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَأْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًاۗ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ࣖ ٦١

laysa
لَّيْسَ
இல்லை
ʿalā
عَلَى
மீது
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
குருடர்
ḥarajun
حَرَجٌ
குற்றம்
walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
மீது
l-aʿraji
ٱلْأَعْرَجِ
ஊனமுற்றவர்
ḥarajun
حَرَجٌ
குற்றம்
walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā
عَلَى
மீது
l-marīḍi
ٱلْمَرِيضِ
நோயாளி
ḥarajun
حَرَجٌ
குற்றம்
walā
وَلَا
இன்னும் இல்லை
ʿalā
عَلَىٰٓ
மீது
anfusikum
أَنفُسِكُمْ
உங்கள்
an takulū
أَن تَأْكُلُوا۟
நீங்கள் உண்பது
min buyūtikum
مِنۢ بُيُوتِكُمْ
உங்கள் இல்லங்களிலிருந்து
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
ābāikum
ءَابَآئِكُمْ
உங்கள் தந்தைகளின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
ummahātikum
أُمَّهَٰتِكُمْ
உங்கள் தாய்மார்களின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
ikh'wānikum
إِخْوَٰنِكُمْ
உங்கள் சகோதரர்களின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
akhawātikum
أَخَوَٰتِكُمْ
உங்கள் சகோதரிகளின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
aʿmāmikum
أَعْمَٰمِكُمْ
உங்கள் தந்தையின் சகோதரர்களின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
ʿammātikum
عَمَّٰتِكُمْ
உங்கள் மாமிகளின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
akhwālikum
أَخْوَٰلِكُمْ
உங்கள் தாய்மாமன்களின்
aw
أَوْ
அல்லது
buyūti
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
khālātikum
خَٰلَٰتِكُمْ
உங்கள் தாயின் சகோதரிகளின்
aw
أَوْ
அல்லது
مَا
எந்த
malaktum
مَلَكْتُم
நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ
mafātiḥahu
مَّفَاتِحَهُۥٓ
அதன் சாவிகளை
aw
أَوْ
அல்லது
ṣadīqikum
صَدِيقِكُمْۚ
உங்கள் நண்பனின்
laysa
لَيْسَ
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
குற்றம்
an takulū
أَن تَأْكُلُوا۟
நீங்கள் உண்பது
jamīʿan
جَمِيعًا
நீங்கள் ஒன்றினைந்தவர்களாக
aw
أَوْ
அல்லது
ashtātan
أَشْتَاتًاۚ
பிரிந்தவர்களாக
fa-idhā dakhaltum
فَإِذَا دَخَلْتُم
நீங்கள் நுழைந்தால்
buyūtan
بُيُوتًا
இல்லங்களில்
fasallimū
فَسَلِّمُوا۟
சலாமை சொல்லுங்கள்
ʿalā
عَلَىٰٓ
மீது
anfusikum
أَنفُسِكُمْ
உங்கள்
taḥiyyatan
تَحِيَّةً
முகமனாகிய
min ʿindi l-lahi
مِّنْ عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
mubārakatan
مُبَٰرَكَةً
அருள்நிறைந்த
ṭayyibatan
طَيِّبَةًۚ
நல்ல
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
laʿallakum taʿqilūna
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக
(நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான ("ஸலாமுன்" என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬௧)
Tafseer
௬௨

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَأْذِنُوْهُۗ اِنَّ الَّذِيْنَ يَسْتَأْذِنُوْنَكَ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖۚ فَاِذَا اسْتَأْذَنُوْكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٦٢

innamā l-mu'minūna
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
உண்மைப்படுத்தியவர்கள்தான்
bil-lahi
بِٱللَّهِ
இன்னும் அல்லாஹ்வையும்
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனது தூதரையும்
wa-idhā kānū
وَإِذَا كَانُوا۟
அவர்கள் இருந்தால்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
ʿalā amrin
عَلَىٰٓ أَمْرٍ
ஒரு காரியத்தில்
jāmiʿin
جَامِعٍ
பொது
lam yadhhabū
لَّمْ يَذْهَبُوا۟
செல்ல மாட்டார்கள்
ḥattā yastadhinūhu
حَتَّىٰ يَسْتَـْٔذِنُوهُۚ
அவரிடம் அவர்கள் அனுமதி கேட்காமல்
inna alladhīna yastadhinūnaka
إِنَّ ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ
நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
alladhīna yu'minūna
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
உண்மைப்படுத்தியவர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
warasūlihi
وَرَسُولِهِۦۚ
இன்னும் அவனது தூதரையும்
fa-idhā is'tadhanūka
فَإِذَا ٱسْتَـْٔذَنُوكَ
ஆகவே, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால்
libaʿḍi
لِبَعْضِ
சில
shanihim
شَأْنِهِمْ
தங்களின் காரியத்திற்கு
fadhan
فَأْذَن
அனுமதி அளிப்பீராக
liman shi'ta
لِّمَن شِئْتَ
நீர் நாடியவருக்கு
min'hum
مِنْهُمْ
அவர்களில்
wa-is'taghfir
وَٱسْتَغْفِرْ
இன்னும் பாவமன்னிப்புக் கோருவீராக
lahumu
لَهُمُ
அவர்களுக்காக
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்விடம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தாம். அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உங்களுடைய அனுமதியைக் கோரி (பெற்றே) செல்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்களுடைய யாதொரு அவசர வேலைக்காக உங்களிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீங்கள் விரும்பிய வர்களுக்கு அனுமதி அளியுங்கள். அவர்களுக்காக அல்லாஹ் விடத்தில் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬௨)
Tafseer
௬௩

لَا تَجْعَلُوْا دُعَاۤءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَاۤءِ بَعْضِكُمْ بَعْضًاۗ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًاۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖٓ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٦٣

lā tajʿalū
لَّا تَجْعَلُوا۟
ஆக்கிவிடாதீர்கள்
duʿāa
دُعَآءَ
சாபத்தை
l-rasūli
ٱلرَّسُولِ
தூதரின்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
kaduʿāi
كَدُعَآءِ
சபிப்பது போன்று
baʿḍikum
بَعْضِكُم
உங்களில் சிலர்
baʿḍan
بَعْضًاۚ
சிலரை
qad
قَدْ
திட்டமாக
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna yatasallalūna
ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ
எவர்கள்/நழுவிச் செல்கிறார்கள்
minkum
مِنكُمْ
உங்களில்
liwādhan
لِوَاذًاۚ
மறைவாக
falyaḥdhari
فَلْيَحْذَرِ
(அவர்கள்) உஷாராக இருக்கட்டும்
alladhīna yukhālifūna
ٱلَّذِينَ يُخَالِفُونَ
மாறுசெய்பவர்கள்
ʿan amrihi
عَنْ أَمْرِهِۦٓ
அவருடைய கட்டளைக்கு
an tuṣībahum
أَن تُصِيبَهُمْ
தங்களைஅடைவதை
fit'natun
فِتْنَةٌ
குழப்பம்
aw
أَوْ
அல்லது
yuṣībahum
يُصِيبَهُمْ
தங்களை அடைவதை
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலிதரும்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருதவேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம்முடைய தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவிவிடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு யாதொரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬௩)
Tafseer
௬௪

اَلَآ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قَدْ يَعْلَمُ مَآ اَنْتُمْ عَلَيْهِۗ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْاۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ٦٤

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே சொந்தமானவை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியிலும்
qad
قَدْ
திட்டமாக
yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிந்தவன்
mā antum
مَآ أَنتُمْ
நீங்கள் இருக்கும்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
wayawma
وَيَوْمَ
நாளில்
yur'jaʿūna
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்
ilayhi
إِلَيْهِ
அவனிடம்
fayunabbi-uhum
فَيُنَبِّئُهُم
அவன் அவர்களுக்கு அறிவிப்பான்
bimā ʿamilū
بِمَا عَمِلُوا۟ۗ
அவர்கள் செய்ததை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬௪)
Tafseer