Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Page: 5

An-Nur

(an-Nūr)

௪௧

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰۤفّٰتٍۗ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ ٤١

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yusabbiḥu
يُسَبِّحُ
துதிக்கின்றனர்
lahu
لَهُۥ
அவனை
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானத்தில் உள்ளவர்களும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
wal-ṭayru
وَٱلطَّيْرُ
பறவைகளும்
ṣāffātin
صَٰٓفَّٰتٍۖ
வரிசையாக பறக்கின்ற
kullun
كُلٌّ
ஒவ்வொருவரும்
qad
قَدْ
திட்டமாக
ʿalima
عَلِمَ
அறிந்துள்ளனர்
ṣalātahu
صَلَاتَهُۥ
அவனை தொழுவதையும்
watasbīḥahu
وَتَسْبِيحَهُۥۗ
அவனை துதிப்பதையும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bimā yafʿalūna
بِمَا يَفْعَلُونَ
அவர்கள் செய்வதை
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீங்கள் காண வில்லையா? இவை யாவும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவைகள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௧)
Tafseer
௪௨

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ ٤٢

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
mul'ku
مُلْكُ
ஆட்சி உரியது
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
wa-ilā
وَإِلَى
பக்கமே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
வானங்கள் பூமி (ஆகியவை)யின் ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே! அவனிடமே (அனைவரும்) திரும்பச் செல்ல வேண்டியதிருக்கிறது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௨)
Tafseer
௪௩

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِيْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَاۤءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُصِيْبُ بِهٖ مَنْ يَّشَاۤءُ وَيَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَاۤءُۗ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِ ۗ ٤٣

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuz'jī
يُزْجِى
ஓட்டிவருகிறான்
saḥāban
سَحَابًا
மேகங்களை
thumma
ثُمَّ
பிறகு
yu-allifu
يُؤَلِّفُ
இணைக்கிறான்
baynahu
بَيْنَهُۥ
அவற்றுக்கு இடையில்
thumma
ثُمَّ
பிறகு
yajʿaluhu
يَجْعَلُهُۥ
அவற்றை ஆக்குகிறான்
rukāman
رُكَامًا
ஒன்றிணைக்கப்பட்டதாக
fatarā
فَتَرَى
ஆகவே பார்க்கிறீர்
l-wadqa
ٱلْوَدْقَ
மழை
yakhruju
يَخْرُجُ
வெளிவருவதை
min khilālihi
مِنْ خِلَٰلِهِۦ
அவற்றுக்கு இடையிலிருந்து
wayunazzilu
وَيُنَزِّلُ
அவன் இறக்குகிறான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
min jibālin
مِن جِبَالٍ
மலைகளில்
fīhā
فِيهَا
அதில் உள்ள
min baradin
مِنۢ بَرَدٍ
பனியிலிருந்து
fayuṣību
فَيُصِيبُ
அவன் தண்டிக்கிறான்
bihi
بِهِۦ
அதன் மூலம்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடியவரை
wayaṣrifuhu
وَيَصْرِفُهُۥ
இன்னும் அதை திருப்பிவிடுகிறான்
ʿan
عَن
விட்டும்
man yashāu
مَّن يَشَآءُۖ
தான் நாடியவரை
yakādu sanā
يَكَادُ سَنَا
கடுமையான வெளிச்சம் ஆரம்பித்து விடுகிறது
barqihi
بَرْقِهِۦ
அதன் மின்னலின்
yadhhabu
يَذْهَبُ
பறித்துவிடும்
bil-abṣāri
بِٱلْأَبْصَٰرِ
பார்வைகளை
(பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயமாக அல்லாஹ்தான் அடுக்குகின்றான் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்க வில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீங்கள் காண்கிறீர்கள். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கின்றான். அதனை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதனைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலில் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கின்றது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௩)
Tafseer
௪௪

يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ ٤٤

yuqallibu
يُقَلِّبُ
மாற்றுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَۚ
இரவு இன்னும் பகலை
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இவற்றில்
laʿib'ratan
لَعِبْرَةً
படிப்பினை இருக்கிறது
li-ulī l-abṣāri
لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
அறிவுடையவர்களுக்கு
இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக்கொண்டு இருக்கின்றான். அறிவுடையவருக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௪)
Tafseer
௪௫

وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَاۤبَّةٍ مِّنْ مَّاۤءٍۚ فَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰى بَطْنِهٖۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰى رِجْلَيْنِۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰٓى اَرْبَعٍۗ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَاۤءُۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٤٥

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
khalaqa
خَلَقَ
படைத்தான்
kulla
كُلَّ
எல்லா
dābbatin
دَآبَّةٍ
உயிரினங்களையும்
min māin
مِّن مَّآءٍۖ
தண்ணீரிலிருந்து
famin'hum
فَمِنْهُم
அவர்களில் உண்டு
man yamshī
مَّن يَمْشِى
நடப்பவையும்
ʿalā baṭnihi
عَلَىٰ بَطْنِهِۦ
தனது வயிற்றின் மீது
wamin'hum
وَمِنْهُم
அவர்களில் உண்டு
man yamshī
مَّن يَمْشِى
நடப்பவையும்
ʿalā rij'layni
عَلَىٰ رِجْلَيْنِ
இரண்டு கால்கள் மீது
wamin'hum
وَمِنْهُم
அவர்களில் உண்டு
man yamshī
مَّن يَمْشِى
நடப்பவையும்
ʿalā arbaʿin
عَلَىٰٓ أَرْبَعٍۚ
நான்கு கால்கள் மீது
yakhluqu
يَخْلُقُ
படைக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā yashāu
مَا يَشَآءُۚ
தான் நாடியதை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை யாவும் ஒரு வகையாக இருக்க வில்லை.) அவைகளில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவைகளை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௫)
Tafseer
௪௬

لَقَدْ اَنْزَلْنَآ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍۗ وَاللّٰهُ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٤٦

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
நாம் இறக்கியுள்ளோம்
āyātin
ءَايَٰتٍ
வசனங்களை
mubayyinātin
مُّبَيِّنَٰتٍۚ
தெளிவான
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடியவருக்கு
ilā
إِلَىٰ
பக்கம்
ṣirāṭin mus'taqīmin
صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
நேரான பாதையின்
(மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல) வர்களையே (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௬)
Tafseer
௪௭

وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَۗ وَمَآ اُولٰۤىِٕكَ بِالْمُؤْمِنِيْنَ ٤٧

wayaqūlūna
وَيَقُولُونَ
கூறுகின்றனர்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
wabil-rasūli
وَبِٱلرَّسُولِ
தூதரையும்
wa-aṭaʿnā
وَأَطَعْنَا
கீழ்ப்படிந்தோம்
thumma
ثُمَّ
பிறகு
yatawallā
يَتَوَلَّىٰ
திரும்பி விடுகின்றனர்
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُم
அவர்களில்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
dhālika
ذَٰلِكَۚ
அதற்குப்
wamā
وَمَآ
இல்லை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
(நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம்" என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கை யாளர்களே அல்ல. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௭)
Tafseer
௪௮

وَاِذَا دُعُوْٓا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ٤٨

wa-idhā duʿū
وَإِذَا دُعُوٓا۟
அவர்கள் அழைக்கப்பட்டால்
ilā
إِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனது தூதரின்
liyaḥkuma
لِيَحْكُمَ
தீர்ப்பளிப்பதற்காக
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
idhā farīqun
إِذَا فَرِيقٌ
அப்போது ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُم
அவர்களில்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிக்கின்றனர்
தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௮)
Tafseer
௪௯

وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَقُّ يَأْتُوْٓا اِلَيْهِ مُذْعِنِيْنَ ٤٩

wa-in yakun
وَإِن يَكُن
இருந்தால்
lahumu
لَّهُمُ
அவர்களுக்கு சாதகமாக
l-ḥaqu
ٱلْحَقُّ
சத்தியம்
yatū
يَأْتُوٓا۟
வருகின்றனர்
ilayhi
إِلَيْهِ
அவர் பக்கம்
mudh'ʿinīna
مُذْعِنِينَ
கட்டுப்பட்டவர்களாக
எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம்முடைய தூதருக்கு) கீழ்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௯)
Tafseer
௫௦

اَفِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْٓا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ ۗبَلْ اُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ࣖ ٥٠

afī qulūbihim
أَفِى قُلُوبِهِم
அவர்களது உள்ளங்களில் இருக்கிறதா?
maraḍun
مَّرَضٌ
நோய்
ami
أَمِ
அல்லது
ir'tābū
ٱرْتَابُوٓا۟
அவர்கள் சந்தேகிக்கின்றனரா?
am
أَمْ
அல்லது
yakhāfūna
يَخَافُونَ
பயப்படுகின்றனரா?
an yaḥīfa
أَن يَحِيفَ
அநீதியிழைத்து விடுவார்கள் என்று
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
warasūluhu
وَرَسُولُهُۥۚ
இன்னும் அவனது தூதரும்
bal
بَلْ
மாறாக
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
என்னே! அவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கின்றதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அன்று, அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தாம் வரம்பு மீறும் அநியாயக் காரர்கள். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.) ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௦)
Tafseer