وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّۖ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَاۤىِٕهِنَّ اَوْ اٰبَاۤءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَاۤىِٕهِنَّ اَوْ اَبْنَاۤءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِيْٓ اِخْوَانِهِنَّ اَوْ بَنِيْٓ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَاۤىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التَّابِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَاۤءِ ۖوَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّۗ وَتُوْبُوْٓا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٣١
- waqul
- وَقُل
- கூறுங்கள்
- lil'mu'mināti
- لِّلْمُؤْمِنَٰتِ
- நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு
- yaghḍuḍ'na
- يَغْضُضْنَ
- அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்
- min
- مِنْ
- பார்வைகளை
- abṣārihinna
- أَبْصَٰرِهِنَّ
- பார்வைகளை தங்கள்
- wayaḥfaẓna
- وَيَحْفَظْنَ
- இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும்
- furūjahunna
- فُرُوجَهُنَّ
- தங்கள் மறைவிடங்களை
- walā yub'dīna
- وَلَا يُبْدِينَ
- இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
- zīnatahunna
- زِينَتَهُنَّ
- தங்கள் அலங்காரங்களை
- illā mā ẓahara
- إِلَّا مَا ظَهَرَ
- வெளியில் தெரிபவற்றை தவிர
- min'hā
- مِنْهَاۖ
- அதிலிருந்து
- walyaḍrib'na
- وَلْيَضْرِبْنَ
- இன்னும் அவர்கள் போர்த்திக் கொள்ளட்டும்
- bikhumurihinna
- بِخُمُرِهِنَّ
- தங்கள் முந்தானைகளை
- ʿalā juyūbihinna
- عَلَىٰ جُيُوبِهِنَّۖ
- தங்கள் நெஞ்சுப் பகுதிகள் மீது
- walā yub'dīna
- وَلَا يُبْدِينَ
- இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்
- zīnatahunna
- زِينَتَهُنَّ
- தங்கள் அலங்காரங்களை
- illā libuʿūlatihinna
- إِلَّا لِبُعُولَتِهِنَّ
- தங்கள் கணவர்களுக்கு தவிர
- aw
- أَوْ
- அல்லது
- ābāihinna
- ءَابَآئِهِنَّ
- தங்கள்தந்தைகளுக்கு
- aw
- أَوْ
- அல்லது
- ābāi
- ءَابَآءِ
- தந்தைகளுக்கு
- buʿūlatihinna
- بُعُولَتِهِنَّ
- தங்கள் கணவர்களின்
- aw
- أَوْ
- அல்லது
- abnāihinna
- أَبْنَآئِهِنَّ
- தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு
- aw
- أَوْ
- அல்லது
- abnāi
- أَبْنَآءِ
- ஆண் பிள்ளைகளுக்கு
- buʿūlatihinna
- بُعُولَتِهِنَّ
- தங்கள் கணவர்களின்
- aw
- أَوْ
- அல்லது
- ikh'wānihinna
- إِخْوَٰنِهِنَّ
- தங்கள் சகோதரர்களுக்கு
- aw
- أَوْ
- அல்லது
- banī
- بَنِىٓ
- ஆண் பிள்ளைகளுக்கு
- ikh'wānihinna
- إِخْوَٰنِهِنَّ
- தங்கள் சகோதரர்களின்
- aw
- أَوْ
- அல்லது
- banī
- بَنِىٓ
- ஆண் பிள்ளைகளுக்கு
- akhawātihinna
- أَخَوَٰتِهِنَّ
- தங்கள் சகோதரிகளின்
- aw
- أَوْ
- அல்லது
- nisāihinna
- نِسَآئِهِنَّ
- தங்கள் பெண்களுக்கு
- aw mā malakat
- أَوْ مَا مَلَكَتْ
- அல்லது/சொந்தமாக்கியவர்களுக்கு
- aymānuhunna
- أَيْمَٰنُهُنَّ
- தங்கள் வலக்கரங்கள்
- awi
- أَوِ
- அல்லது
- l-tābiʿīna
- ٱلتَّٰبِعِينَ
- பணியாளர்களுக்கு
- ghayri ulī l-ir'bati
- غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ
- ஆசையில்லாத
- mina l-rijāli
- مِنَ ٱلرِّجَالِ
- ஆண்களில்
- awi
- أَوِ
- அல்லது
- l-ṭif'li
- ٱلطِّفْلِ
- சிறுவர்களுக்கு
- alladhīna lam yaẓharū
- ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟
- எவர்கள்/அறிவில்லை
- ʿalā ʿawrāti
- عَلَىٰ عَوْرَٰتِ
- மறைவிடங்களை
- l-nisāi
- ٱلنِّسَآءِۖ
- பெண்களின்
- walā yaḍrib'na
- وَلَا يَضْرِبْنَ
- இன்னும் அவர்கள் தட்டி நடக்க வேண்டாம்
- bi-arjulihinna
- بِأَرْجُلِهِنَّ
- தங்கள் கால்களை
- liyuʿ'lama
- لِيُعْلَمَ
- அறியப்படுவதற்காக
- mā yukh'fīna
- مَا يُخْفِينَ
- எதை/மறைக்கின்றனர்
- min zīnatihinna
- مِن زِينَتِهِنَّۚ
- தங்கள் அலங்காரங்களை
- watūbū
- وَتُوبُوٓا۟
- இன்னும் பாவமன்னிப்பு கோருங்கள்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கம்
- jamīʿan
- جَمِيعًا
- அனைத்திற்கும்
- ayyuha l-mu'minūna
- أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்களே
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். அன்றி, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௧)Tafseer
وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَاۤىِٕكُمْۗ اِنْ يَّكُوْنُوْا فُقَرَاۤءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ٣٢
- wa-ankiḥū
- وَأَنكِحُوا۟
- நீங்கள் திருமணம் செய்து வையுங்கள்
- l-ayāmā
- ٱلْأَيَٰمَىٰ
- ஜோடி இல்லாதவர்களுக்கு
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- wal-ṣāliḥīna
- وَٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களுக்கு
- min
- مِنْ
- ஆண் அடிமைகளிலும்
- ʿibādikum
- عِبَادِكُمْ
- ஆண் அடிமைகளிலும் உங்கள்
- wa-imāikum
- وَإِمَآئِكُمْۚ
- உங்கள் பெண் அடிமைகளிலும்
- in yakūnū
- إِن يَكُونُوا۟
- அவர்கள் இருந்தால்
- fuqarāa
- فُقَرَآءَ
- ஏழைகளாக
- yugh'nihimu
- يُغْنِهِمُ
- அவர்களை நிறைவுறச் செய்வான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min faḍlihi
- مِن فَضْلِهِۦۗ
- தனது அருளால்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- wāsiʿun
- وَٰسِعٌ
- விசாலமானவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௨)Tafseer
وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۗوَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِيْٓ اٰتٰىكُمْ ۗوَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَاۤءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣٣
- walyastaʿfifi
- وَلْيَسْتَعْفِفِ
- ஒழுக்கமாக இருக்கட்டும்
- alladhīna lā yajidūna
- ٱلَّذِينَ لَا يَجِدُونَ
- வசதி பெறாதவர்கள்
- nikāḥan
- نِكَاحًا
- திருமணத்திற்கு
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yugh'niyahumu
- يُغْنِيَهُمُ
- அவர்களை நிறைவு செய்கிற
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min faḍlihi
- مِن فَضْلِهِۦۗ
- தன் அருளால்
- wa-alladhīna yabtaghūna
- وَٱلَّذِينَ يَبْتَغُونَ
- இன்னும் விரும்புபவர்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- பத்திரம் எழுதிட
- mimmā malakat
- مِمَّا مَلَكَتْ
- சொந்தமாக்கிக் கொண்டவர்களில்
- aymānukum
- أَيْمَٰنُكُمْ
- உங்கள் வலக்கரங்கள்
- fakātibūhum
- فَكَاتِبُوهُمْ
- எழுதிக் கொடுங்கள் அவர்களுக்கு
- in ʿalim'tum
- إِنْ عَلِمْتُمْ
- நீங்கள் அறிந்தால்
- fīhim
- فِيهِمْ
- அவர்களில்
- khayran
- خَيْرًاۖ
- நன்மையை
- waātūhum
- وَءَاتُوهُم
- இன்னும் கொடுங்கள் அவர்களுக்கு
- min māli
- مِّن مَّالِ
- செல்வத்திலிருந்து
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- alladhī ātākum
- ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْۚ
- எது/கொடுத்தான்/உங்களுக்கு
- walā tuk'rihū
- وَلَا تُكْرِهُوا۟
- நிர்ப்பந்திக்காதீர்கள்
- fatayātikum
- فَتَيَٰتِكُمْ
- உங்கள் பெண் அடிமைகளை
- ʿalā l-bighāi
- عَلَى ٱلْبِغَآءِ
- விபச்சாரத்தில்
- in aradna
- إِنْ أَرَدْنَ
- விரும்பினால்
- taḥaṣṣunan
- تَحَصُّنًا
- பத்தினித்தனத்தை
- litabtaghū
- لِّتَبْتَغُوا۟
- நீ விரும்பியதற்காக
- ʿaraḍa
- عَرَضَ
- பொருளை
- l-ḥayati l-dun'yā
- ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
- உலக வாழ்க்கையின்
- waman
- وَمَن
- யார்
- yuk'rihhunna
- يُكْرِههُّنَّ
- அவர்களை நிர்ப்பந்திப்பாரோ
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- ik'rāhihinna
- إِكْرَٰهِهِنَّ
- அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- கருணை காட்டுபவன்
(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்களுடைய கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்துவிடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.) ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௩)Tafseer
وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكُمْ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ ࣖ ٣٤
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- anzalnā
- أَنزَلْنَآ
- இறக்கியுள்ளோம்
- ilaykum
- إِلَيْكُمْ
- உங்களுக்கு
- āyātin
- ءَايَٰتٍ
- வசனங்களை
- mubayyinātin
- مُّبَيِّنَٰتٍ
- தெளிவான
- wamathalan
- وَمَثَلًا
- உதாரணத்தையும்
- mina alladhīna khalaw
- مِّنَ ٱلَّذِينَ خَلَوْا۟
- சென்றவர்களின்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- உங்களுக்கு முன்னர்
- wamawʿiẓatan
- وَمَوْعِظَةً
- உபதேசத்தையும்
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களுக்கு
நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்; ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௪)Tafseer
۞ اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌۗ اَلْمِصْبَاحُ فِيْ زُجَاجَةٍۗ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍۙ يَّكَادُ زَيْتُهَا يُضِيْۤءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌۗ نُوْرٌ عَلٰى نُوْرٍۗ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَاۤءُۗ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ۙ ٣٥
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- nūru
- نُورُ
- ஒளி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- மற்றும் பூமி
- mathalu
- مَثَلُ
- தன்மையாவது
- nūrihi
- نُورِهِۦ
- ஒளியின்
- kamish'katin
- كَمِشْكَوٰةٍ
- ஒரு மாடத்தைப் போன்றாகும்
- fīhā
- فِيهَا
- அதில்
- miṣ'bāḥun
- مِصْبَاحٌۖ
- ஒரு விளக்கு உள்ளது
- l-miṣ'bāḥu
- ٱلْمِصْبَاحُ
- அந்த விளக்கு
- fī zujājatin
- فِى زُجَاجَةٍۖ
- கண்ணாடியில் உள்ளது
- l-zujājatu
- ٱلزُّجَاجَةُ
- அந்த கண்ணாடி
- ka-annahā
- كَأَنَّهَا
- அதைப் போல் உள்ளது
- kawkabun
- كَوْكَبٌ
- ஒரு நட்சத்திரம்
- durriyyun
- دُرِّىٌّ
- மின்னக்கூடிய
- yūqadu
- يُوقَدُ
- எரிக்கப்படுகிறது
- min
- مِن
- இருந்து
- shajaratin
- شَجَرَةٍ
- மரத்தில்
- mubārakatin
- مُّبَٰرَكَةٍ
- அருள் நிறைந்த
- zaytūnatin
- زَيْتُونَةٍ
- ஆலிவ் என்னும்
- lā sharqiyyatin
- لَّا شَرْقِيَّةٍ
- கிழக்கிலும் அல்லாத
- walā gharbiyyatin
- وَلَا غَرْبِيَّةٍ
- மேற்கிலும் அல்லாத
- yakādu
- يَكَادُ
- ஆரம்பித்து விடுகிறது
- zaytuhā
- زَيْتُهَا
- அதன் எண்ணெய்
- yuḍīu
- يُضِىٓءُ
- ஒளிர்கிறது
- walaw lam tamsashu
- وَلَوْ لَمْ تَمْسَسْهُ
- அதன் மீது படவில்லை
- nārun
- نَارٌۚ
- தீ
- nūrun
- نُّورٌ
- ஒளி
- ʿalā
- عَلَىٰ
- மேல்
- nūrin
- نُورٍۗ
- ஒளிக்கு
- yahdī
- يَهْدِى
- நேர்வழி காட்டுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- linūrihi
- لِنُورِهِۦ
- தன் ஒளிக்கு
- man
- مَن
- தான்
- yashāu
- يَشَآءُۚ
- நாடியவர்களுக்கு
- wayaḍribu
- وَيَضْرِبُ
- இன்னும் விவரிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-amthāla
- ٱلْأَمْثَٰلَ
- உதாரணங்களை
- lilnnāsi
- لِلنَّاسِۗ
- மக்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- அனைத்தையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அல்லாஹ், வானங்கள் பூமி (ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கும்) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக்கொண்டு) இருக்கின்றது. (அதில்) பாக்கியம் பெற்ற "ஜைத்தூன்" மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகின்றது. அது கீழ்நாட்டிலுள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெய் நெருப்புத் தொடாவிடினும் பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடிய வர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகின்றான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன்னுடைய தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் மிக்க அறிந்தவன். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௫)Tafseer
فِيْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ يُسَبِّحُ لَهٗ فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۙ ٣٦
- fī buyūtin
- فِى بُيُوتٍ
- இறை இல்லங்களில்
- adhina
- أَذِنَ
- அனுமதித்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- an tur'faʿa
- أَن تُرْفَعَ
- அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கு
- wayudh'kara
- وَيُذْكَرَ
- இன்னும் நினைவு கூறப்படுவதற்கும்
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- us'muhu
- ٱسْمُهُۥ
- அவனது திருப்பெயர்
- yusabbiḥu
- يُسَبِّحُ
- துதிக்கின்றனர்
- lahu
- لَهُۥ
- அவனை
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- bil-ghuduwi
- بِٱلْغُدُوِّ
- காலையிலும்
- wal-āṣāli
- وَٱلْءَاصَالِ
- மாலையிலும்
(அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகளில் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் கூறவும், அதைக் கண்ணியப் படுத்தும்படியும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு, ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௬)Tafseer
رِجَالٌ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِيْتَاۤءِ الزَّكٰوةِ ۙيَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ ٣٧
- rijālun
- رِجَالٌ
- பல ஆண்கள்
- lā tul'hīhim
- لَّا تُلْهِيهِمْ
- அவர்களை திசை திருப்பி விடாது
- tijāratun
- تِجَٰرَةٌ
- வர்த்தகமோ
- walā bayʿun
- وَلَا بَيْعٌ
- விற்பனையோ
- ʿan dhik'ri
- عَن ذِكْرِ
- நினைவை விட்டும்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-iqāmi
- وَإِقَامِ
- இன்னும் நிலைநிறுத்துவதை
- l-ṣalati
- ٱلصَّلَوٰةِ
- தொழுகையை
- waītāi l-zakati
- وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِۙ
- இன்னும் அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை
- yakhāfūna
- يَخَافُونَ
- அவர்கள் பயப்படுவார்கள்
- yawman
- يَوْمًا
- ஒரு நாளை
- tataqallabu fīhi
- تَتَقَلَّبُ فِيهِ
- தடுமாறும்/அதில்
- l-qulūbu
- ٱلْقُلُوبُ
- உள்ளங்களும்
- wal-abṣāru
- وَٱلْأَبْصَٰرُ
- பார்வைகளும்
(அதில்) பலர் இருக்கின்றனர். (அவர்கள் எத்தகைய வரென்றால்) அவர்களுடைய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பி விடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறி விடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௭)Tafseer
لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖۗ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٣٨
- liyajziyahumu
- لِيَجْزِيَهُمُ
- கூலி வழங்குவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- aḥsana
- أَحْسَنَ
- மிக அழகியவற்றுக்கு
- mā ʿamilū
- مَا عَمِلُوا۟
- அவர்கள் செய்ததில்
- wayazīdahum
- وَيَزِيدَهُم
- மேலும் அதிகப்படுத்துவதற்காக அவர்களுக்கு
- min faḍlihi
- مِّن فَضْلِهِۦۗ
- தனது அருளிலிருந்து
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yarzuqu
- يَرْزُقُ
- வழங்குகிறான்
- man yashāu
- مَن يَشَآءُ
- தான் நாடியவருக்கு
- bighayri ḥisābin
- بِغَيْرِ حِسَابٍ
- கணக்கின்றி
அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) வைகளைவிட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மென்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௮)Tafseer
وَالَّذِيْنَ كَفَرُوْٓا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَاۤءًۗ حَتّٰٓى اِذَا جَاۤءَهٗ لَمْ يَجِدْهُ شَيْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ۗ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ ٣٩
- wa-alladhīna kafarū
- وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
- நிராகரிப்பாளர்கள்
- aʿmāluhum
- أَعْمَٰلُهُمْ
- அவர்களுடைய செயல்கள்
- kasarābin
- كَسَرَابٍۭ
- கானல்நீர் போலாகும்
- biqīʿatin
- بِقِيعَةٍ
- வெட்ட வெளியில்
- yaḥsabuhu
- يَحْسَبُهُ
- அதை எண்ணுகிறார்
- l-ẓamānu
- ٱلظَّمْـَٔانُ
- தாகித்தவன்
- māan
- مَآءً
- தண்ணீராக
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā jāahu
- إِذَا جَآءَهُۥ
- அதனிடம் அவர் வந்தால்
- lam yajid'hu
- لَمْ يَجِدْهُ
- அதை காணமாட்டார்
- shayan
- شَيْـًٔا
- ஏதும்
- wawajada
- وَوَجَدَ
- காண்பார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ʿindahu
- عِندَهُۥ
- அதனிடம்
- fawaffāhu
- فَوَفَّىٰهُ
- அவன் அவருக்கு நிறைவேற்றுவான்
- ḥisābahu
- حِسَابَهُۥۗ
- அவருடைய கணக்கை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- sarīʿu
- سَرِيعُ
- மிகத் தீவிரமானவன்
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- கேள்வி கணக்கு கேட்பதில்
எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர் களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதனைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கின்றான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩௯)Tafseer
اَوْ كَظُلُمٰتٍ فِيْ بَحْرٍ لُّجِّيٍّ يَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌۗ ظُلُمٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍۗ اِذَآ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰىهَاۗ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ࣖ ٤٠
- aw
- أَوْ
- அல்லது
- kaẓulumātin
- كَظُلُمَٰتٍ
- இருள்களைப் போலாகும்
- fī baḥrin
- فِى بَحْرٍ
- கடலில் உள்ள
- lujjiyyin
- لُّجِّىٍّ
- ஆழமான
- yaghshāhu
- يَغْشَىٰهُ
- அதை சூழ்ந்திருக்க
- mawjun min fawqihi
- مَوْجٌ مِّن فَوْقِهِۦ
- அலை / மேல்
- mawjun
- مَوْجٌ
- அதன் அலை
- min fawqihi
- مِّن فَوْقِهِۦ
- அதற்கு மேல்
- saḥābun
- سَحَابٌۚ
- மேகம்
- ẓulumātun
- ظُلُمَٰتٌۢ
- இருள்கள்
- baʿḍuhā
- بَعْضُهَا
- அவற்றில் சில
- fawqa
- فَوْقَ
- மேலாக
- baʿḍin
- بَعْضٍ
- சிலவற்றுக்கு
- idhā akhraja
- إِذَآ أَخْرَجَ
- அவன் வெளியே நீட்டினால்
- yadahu
- يَدَهُۥ
- தனது கையை
- lam yakad yarāhā
- لَمْ يَكَدْ يَرَىٰهَاۗ
- அதை அவனால் பார்க்க முடியாது
- waman
- وَمَن
- யாருக்கு
- lam yajʿali
- لَّمْ يَجْعَلِ
- ஏற்படுத்தவில்லையோ
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- nūran
- نُورًا
- ஒளியை
- famā
- فَمَا
- இல்லை
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- min nūrin
- مِن نُّورٍ
- ஒளியும்
அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கின்றது. அதனை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக் கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதனைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன் மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) யாதொரு பிரகாசமும் கிட்டாது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪௦)Tafseer