Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Page: 2

An-Nur

(an-Nūr)

௧௧

اِنَّ الَّذِيْنَ جَاۤءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْۗ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْۗ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْۗ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِۚ وَالَّذِيْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ ١١

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
jāū bil-if'ki
جَآءُو بِٱلْإِفْكِ
இட்டுக்கட்டியவர்கள்
ʿuṣ'batun
عُصْبَةٌ
ஒரு குழுவினர்தான்
minkum
مِّنكُمْۚ
உங்களில் உள்ள
lā taḥsabūhu
لَا تَحْسَبُوهُ
அதை கருதாதீர்கள்
sharran
شَرًّا
தீமையாக
lakum
لَّكُمۖ
உங்களுக்கு
bal
بَلْ
மாறாக
huwa
هُوَ
அது
khayrun
خَيْرٌ
நன்மைதான்
lakum
لَّكُمْۚ
உங்களுக்கு
likulli im'ri-in
لِكُلِّ ٱمْرِئٍ
ஒவ்வொருவருக்கும்
min'hum
مِّنْهُم
அவர்களில்
mā ik'tasaba
مَّا ٱكْتَسَبَ
அவர் செய்தது
mina l-ith'mi
مِنَ ٱلْإِثْمِۚ
பாவத்தில்
wa-alladhī tawallā
وَٱلَّذِى تَوَلَّىٰ
செய்தவர்கள்
kib'rahu
كِبْرَهُۥ
பெரியதை
min'hum
مِنْهُمْ
அதில்
lahu
لَهُۥ
அவருக்கு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை உண்டு
ʿaẓīmun
عَظِيمٌ
பெரும்
எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தாம்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ணவேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொரு வருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக்கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௧)
Tafseer
௧௨

لَوْلَآ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَآ اِفْكٌ مُّبِيْنٌ ١٢

lawlā idh samiʿ'tumūhu
لَّوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ
நீங்கள் அதைக் கேட்டபோது
ẓanna
ظَنَّ
எண்ணியிருக்க
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்ட ஆண்களும்
wal-mu'minātu
وَٱلْمُؤْمِنَٰتُ
நம்பிக்கை கொண்ட பெண்களும்
bi-anfusihim
بِأَنفُسِهِمْ
தங்களைப் பற்றி
khayran
خَيْرًا
நல்லதை
waqālū
وَقَالُوا۟
இன்னும் அவர்கள் சொல்லியிருக்க வேண்டாமா
hādhā
هَٰذَآ
இது
if'kun
إِفْكٌ
இட்டுக்கட்டு
mubīnun
مُّبِينٌ
தெளிவான
இதனை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதனை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து "இது பகிரங்கமான அவதூறே" என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௨)
Tafseer
௧௩

لَوْلَا جَاۤءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَاۤءَۚ فَاِذْ لَمْ يَأْتُوْا بِالشُّهَدَاۤءِ فَاُولٰۤىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ١٣

lawlā jāū
لَّوْلَا جَآءُو
கொண்டு வந்திருக்க வேண்டாமா!
ʿalayhi
عَلَيْهِ
அதற்கு
bi-arbaʿati
بِأَرْبَعَةِ
நான்கு
shuhadāa
شُهَدَآءَۚ
சாட்சிகளை
fa-idh lam yatū
فَإِذْ لَمْ يَأْتُوا۟
ஆகவே அவர்கள் வராததால்
bil-shuhadāi
بِٱلشُّهَدَآءِ
சாட்சிகளைக்கொண்டு
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
humu
هُمُ
அவர்கள்தான்
l-kādhibūna
ٱلْكَٰذِبُونَ
பொய்யர்கள்
(அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தாம் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௩)
Tafseer
௧௪

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِيْ مَآ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ ١٤

walawlā faḍlu
وَلَوْلَا فَضْلُ
அருளும் இல்லாதிருந்தால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
கருணையும்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையிலும்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
மறுமையிலும்
lamassakum
لَمَسَّكُمْ
உங்களுக்கு கிடைத்திருக்கும்
fī mā afaḍtum fīhi
فِى مَآ أَفَضْتُمْ فِيهِ
நீங்கள் ஈடுபட்ட விஷயத்தில்
ʿadhābun ʿaẓīmun
عَذَابٌ عَظِيمٌ
பெரிய தண்டனை
இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் இல்லாதிருந்திருப்பின் இதனை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் காரணமாக மகத்தான வேதனை உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௪)
Tafseer
௧௫

اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَيْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًاۙ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ ۚ ١٥

idh
إِذْ
ஏனெனில்
talaqqawnahu
تَلَقَّوْنَهُۥ
அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள்
bi-alsinatikum
بِأَلْسِنَتِكُمْ
நீங்கள்உங்கள் நாவுகளால்
wataqūlūna
وَتَقُولُونَ
இன்னும் அதை கூறுகிறீர்கள்
bi-afwāhikum
بِأَفْوَاهِكُم
உங்கள் வாய்களால்
مَّا
எதைப் பற்றி
laysa lakum
لَيْسَ لَكُم
உங்களுக்கு இல்லையோ
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
ʿil'mun
عِلْمٌ
அறிவு
wataḥsabūnahu
وَتَحْسَبُونَهُۥ
அதை கருதுகிறீர்கள்
hayyinan
هَيِّنًا
மிக இலகுவாக
wahuwa
وَهُوَ
அதுவோ இருக்கிறது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ʿaẓīmun
عَظِيمٌ
மிகப்பெரியதாக
(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௫)
Tafseer
௧௬

وَلَوْلَآ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَنَآ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَاۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ ١٦

walawlā
وَلَوْلَآ
வேண்டாமா
idh samiʿ'tumūhu
إِذْ سَمِعْتُمُوهُ
அதை நீங்கள் கேட்டபோது
qul'tum
قُلْتُم
நீங்கள் சொல்லியிருக்க
mā yakūnu
مَّا يَكُونُ
தகாது
lanā
لَنَآ
எங்களுக்கு
an natakallama
أَن نَّتَكَلَّمَ
நாங்கள் பேசுவது
bihādhā
بِهَٰذَا
இதை
sub'ḥānaka hādhā
سُبْحَٰنَكَ هَٰذَا
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் / இது
buh'tānun
بُهْتَٰنٌ
அபாண்டமான பேச்சு
ʿaẓīmun
عَظِيمٌ
பெரிய
நீங்கள் இதனைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இத்தகைய விஷயத்தை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௬)
Tafseer
௧௭

يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖٓ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ۚ ١٧

yaʿiẓukumu l-lahu
يَعِظُكُمُ ٱللَّهُ
அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான்
an taʿūdū
أَن تَعُودُوا۟
நீங்கள் மீண்டும் வரக்கூடாது என்று
limith'lihi
لِمِثْلِهِۦٓ
இது போன்றதற்கு
abadan
أَبَدًا
ஒரு போதும்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௭)
Tafseer
௧௮

وَيُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ١٨

wayubayyinu
وَيُبَيِّنُ
இன்னும் விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِۚ
வசனங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௮)
Tafseer
௧௯

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ١٩

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna yuḥibbūna
ٱلَّذِينَ يُحِبُّونَ
விரும்பக்கூடியவர்கள்
an tashīʿa
أَن تَشِيعَ
பரவுவதை
l-fāḥishatu
ٱلْفَٰحِشَةُ
அசிங்கமான செயல்
fī alladhīna āmanū
فِى ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கிடையில்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையிலும்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۚ
மறுமையிலும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக் கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௯)
Tafseer
௨௦

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ ࣖ ٢٠

walawlā
وَلَوْلَا
இல்லாதிருந்தால்
faḍlu
فَضْلُ
அருளும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
அவனது கருணையும்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
raūfun
رَءُوفٌ
மிக்க இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையுள்ளவன்
அல்லாஹ்வினுடைய அருளும் கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இல்லாதிருந்தால் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்). ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨௦)
Tafseer