குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௧
Qur'an Surah Al-Mu'minun Verse 91
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍۗ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- mā ittakhadha
- مَا ٱتَّخَذَ
- Not Allah has taken
- ஏற்படுத்திக் கொள்ளவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah has taken
- அல்லாஹ்
- min waladin
- مِن وَلَدٍ
- any son
- எந்த ஒரு குழந்தையையும்
- wamā kāna
- وَمَا كَانَ
- and not is
- இருக்கவில்லை
- maʿahu
- مَعَهُۥ
- with Him
- அவனுடன்
- min ilāhin
- مِنْ إِلَٰهٍۚ
- any god
- எந்தக் கடவுளும்
- idhan
- إِذًا
- Then
- அப்படி இருந்திருந்தால்
- ladhahaba
- لَّذَهَبَ
- surely (would have) taken away
- கொண்டு சென்று விடுவார்கள்
- kullu
- كُلُّ
- each
- ஒவ்வொரு
- ilāhin
- إِلَٰهٍۭ
- god
- கடவுளும்
- bimā khalaqa
- بِمَا خَلَقَ
- what he created
- இன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள்
- walaʿalā baʿḍuhum
- وَلَعَلَا بَعْضُهُمْ
- and surely would have overpowered some of them
- தான் படைத்ததை
- ʿalā baʿḍin
- عَلَىٰ بَعْضٍۚ
- [on] others
- சிலர் மீது
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- Glory be
- மகா பரிசுத்தமானவன்
- l-lahi
- ٱللَّهِ
- (to) Allah
- அல்லாஹ்
- ʿammā yaṣifūna
- عَمَّا يَصِفُونَ
- above what they attribute!
- அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு
Transliteration:
Mat takhazal laahu minw waladinw wa maa kaana ma'ahoo min ilaah; izal lazahaba kullu ilaahim bimaa khalaqa wa la'alaa ba'duhum 'alaa ba'd; Subhaannal laahi 'ammaa yasifoon(QS. al-Muʾminūn:91)
English Sahih International:
Allah has not taken any son, nor has there ever been with Him any deity. [If there had been], then each deity would have taken what it created, and some of them would have [sought to] overcome others. Exalted is Allah above what they describe [concerning Him]. (QS. Al-Mu'minun, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௧)
Jan Trust Foundation
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் (தனக்கு) எந்த ஒரு குழந்தையையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (படைப்புகளை படைத்தபோது) அவனுடன் எந்தக் கடவுளும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் சிலர், சிலர் மீது ஆதிக்கம் செலுத்தி (வென்று) இருப்பார்கள். அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். (அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, வேறு கடவுளும் இல்லை.)