Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௫

Qur'an Surah Al-Mu'minun Verse 75

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّلَجُّوْا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ (المؤمنون : ٢٣)

walaw raḥim'nāhum
وَلَوْ رَحِمْنَٰهُمْ
And if We had mercy on them
அவர்கள் மீது நாம் கருணை புரிந்தால்
wakashafnā
وَكَشَفْنَا
and We removed
இன்னும் நாம் நீக்கி விட்டால்
mā bihim
مَا بِهِم
what (was) on them
அவர்களுக்குள்ள
min ḍurrin
مِّن ضُرٍّ
of (the) hardship
தீங்கை
lalajjū
لَّلَجُّوا۟
surely they would persist
பிடிவாதம் பிடித்திருப்பார்கள்
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
in their transgression
தங்களது வரம்பு மீறுவதில்தான்
yaʿmahūna
يَعْمَهُونَ
wandering blindly
அவர்கள் தடுமாறியவர்களாக

Transliteration:

Wa law rahimnaahum wa kashafnaa maa bihim min durril lalajjoo fee tughyaanihim ya'mahoon (QS. al-Muʾminūn:75)

English Sahih International:

And even if We gave them mercy and removed what was upon them of affliction, they would persist in their transgression, wandering blindly. (QS. Al-Mu'minun, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்களுடைய வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௫)

Jan Trust Foundation

ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது நாம் கருணை புரிந்து அவர்களுக்குள்ள தீங்கை நாம் நீக்கி விட்டால் அவர்கள் தங்களது வரம்பு மீறுவதில்தான் தடுமாறியவர்களாக பிடிவாதம் பிடித்திருப்பார்கள்.