Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௨

Qur'an Surah Al-Mu'minun Verse 72

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ ۖوَّهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ (المؤمنون : ٢٣)

am
أَمْ
Or
அல்லது
tasaluhum
تَسْـَٔلُهُمْ
you ask them
அவர்களிடம் நீர் எதையும் கேட்கிறீரா
kharjan
خَرْجًا
(for) a payment?
கூலி
fakharāju
فَخَرَاجُ
But the payment
எனவே கூலிதான்
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
khayrun
خَيْرٌۖ
(is) best
மிகச் சிறந்தது
wahuwa
وَهُوَ
and He
அவன்
khayru
خَيْرُ
(is) the Best
மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
(of) the Providers
கொடை வழங்குபவர்களில்

Transliteration:

Am tas'aluhum kharjan fakharaaju Rabbika khairunw wa Huwa khairur raaziqeen (QS. al-Muʾminūn:72)

English Sahih International:

Or do you, [O Muhammad], ask them for payment? But the reward of your Lord is best, and He is the best of providers. (QS. Al-Mu'minun, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

அல்லது, நீங்கள் அவர்களிடம் யாதொரு கூலியையும் கேட்கின்றீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உங்களது இறைவன் (உங்களுக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாக இருக்கிறது. அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௨)

Jan Trust Foundation

அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது - இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது அவர்களிடம் (இந்த சத்தியத்தை போதித்ததற்காக) நீர் கூலி எதையும் கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கின்றனரா?) உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன்.