குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௧
Qur'an Surah Al-Mu'minun Verse 71
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوِ اتَّبَعَ الْحَقُّ اَهْوَاۤءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّۗ بَلْ اَتَيْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَ ۗ (المؤمنون : ٢٣)
- walawi ittabaʿa
- وَلَوِ ٱتَّبَعَ
- But if (had) followed
- பின்பற்றினால்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- the truth
- உண்மையாளன்
- ahwāahum
- أَهْوَآءَهُمْ
- their desires
- விருப்பங்களை அவர்களது
- lafasadati
- لَفَسَدَتِ
- surely (would) have been corrupted
- நாசமடைந்து இருப்பார்கள்
- l-samāwātu
- ٱلسَّمَٰوَٰتُ
- the heavens
- வானங்களும்
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- and the earth
- இன்னும் பூமியும்
- waman fīhinna
- وَمَن فِيهِنَّۚ
- and whoever (is) therein
- இன்னும் அவற்றில் உள்ளவர்களும்
- bal ataynāhum
- بَلْ أَتَيْنَٰهُم
- Nay We have brought them
- மாறாக அவர்களுக்குக் கொடுத்தோம்
- bidhik'rihim
- بِذِكْرِهِمْ
- their reminder
- அவர்களுக்குரிய விளக்கத்தை
- fahum
- فَهُمْ
- but they
- ஆனால் அவர்கள்
- ʿan
- عَن
- from
- கூறப்பட்ட விளக்கத்தை
- dhik'rihim
- ذِكْرِهِم
- their reminder
- கூறப்பட்ட விளக்கத்தை தங்களுக்கு
- muʿ'riḍūna
- مُّعْرِضُونَ
- (are) turning away
- புறக்கணிக்கக் கூடியவர்கள்
Transliteration:
Wa lawit taba'al haqqu ahwaaa'ahum lafasadatis samaawaatu wal ardu wa man feehinnn; bal atainaahum bizikrihim fahum 'an zikrihim mu'ridon(QS. al-Muʾminūn:71)
English Sahih International:
But if the Truth [i.e., Allah] had followed their inclinations, the heavens and the earth and whoever is in them would have been ruined. Rather, We have brought them their message, but they, from their message, are turning away. (QS. Al-Mu'minun, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவைகளும் அழிந்துவிடும். ஆகவே, அவர்களுக்கு நல் உபதேசத்தையே அனுப்பினோம். எனினும், அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தையே புறக்கணித்து விட்டனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௧)
Jan Trust Foundation
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றினால் (-அதற்கு ஏற்ப அவன் நடந்து கொண்டால்) வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கக்கூடியவர்கள் ஆவர்.