Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௦

Qur'an Surah Al-Mu'minun Verse 70

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يَقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ ۗ بَلْ جَاۤءَهُمْ بِالْحَقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ (المؤمنون : ٢٣)

am
أَمْ
Or
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
they say
இவர்கள் கூறுகின்றனரா
bihi
بِهِۦ
"In him
அவருக்கு
jinnatun
جِنَّةٌۢۚ
(is) madness?"
பைத்தியம்
bal
بَلْ
Nay
மாறாக
jāahum
جَآءَهُم
he brought them
வந்துள்ளார் அவர்களிடம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
the truth
உண்மையைக் கொண்டு
wa-aktharuhum
وَأَكْثَرُهُمْ
but most of them
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்
lil'ḥaqqi
لِلْحَقِّ
to the truth
உண்மையை
kārihūna
كَٰرِهُونَ
(are) averse
வெறுக்கின்றார்கள்

Transliteration:

Am yaqooloona bihee jinnnah; bal jaaa'ahum bilhaqqi wa aksaruhum lil haqqi kaarihoon (QS. al-Muʾminūn:70)

English Sahih International:

Or do they say, "In him is madness"? Rather, he brought them the truth, but most of them, to the truth, are averse. (QS. Al-Mu'minun, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அல்லது "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றது" என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம்முடைய தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௦)

Jan Trust Foundation

அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது அவருக்கு பைத்தியம் இருக்கிறது (எனவே, இப்படி உளருகிறார்) என்று இவர்கள் கூறுகின்றனரா? மாறாக, இவர் அவர்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளார். அவர்களில் அதிகமானவர்கள், உண்மையை வெறுக்கின்றார்கள்.