Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௨

Qur'an Surah Al-Mu'minun Verse 62

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۖ وَلَدَيْنَا كِتٰبٌ يَّنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (المؤمنون : ٢٣)

walā nukallifu
وَلَا نُكَلِّفُ
And not We burden
நாம் சிரமம் தருவதில்லை
nafsan
نَفْسًا
any soul
எந்த ஓர் ஆன்மாவுக்கும்
illā
إِلَّا
except
தவிர
wus'ʿahā
وُسْعَهَاۖ
(to) its capacity
அதன் வசதிக்கு உட்பட்டே
waladaynā
وَلَدَيْنَا
and with Us
இன்னும் நம்மிடம் இருக்கின்றது
kitābun
كِتَٰبٌ
(is) a Record
ஒரு புத்தகம்
yanṭiqu
يَنطِقُ
(which) speaks
பேசுகின்றது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
with the truth;
சத்தியத்தைக் கொண்டு
wahum
وَهُمْ
and they
அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
(will) not be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa laa nukallifu nafsan illaa wus'ahaa wa ladainaa kitaabuny yantiqu bilhaqqi w ahum la yuzlamoon (QS. al-Muʾminūn:62)

English Sahih International:

And We charge no soul except [with that within] its capacity, and with Us is a record which speaks with truth; and they will not be wronged. (QS. Al-Mu'minun, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

நாம் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. ஒவ்வொருவரின் மெய்யான தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கின்றது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௨)

Jan Trust Foundation

நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் வசதிக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்பினங்களுடைய செயல்கள் எழுதப்பட்ட) சத்தியத்தைக் கொண்டு பேசுகின்ற ஒரு புத்தகம் இருக்கின்றது. (கூடுதல் குறைவின்றி அடியார்களின் செயலை அறிவிக்கின்ற புத்தகம் அது.) அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.