குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௦
Qur'an Surah Al-Mu'minun Verse 60
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَآ اٰتَوْا وَّقُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- இன்னும் அவர்கள்
- yu'tūna
- يُؤْتُونَ
- give
- கொடுப்பார்கள்
- mā ātaw
- مَآ ءَاتَوا۟
- what they give
- எதைக் கொடுத்தார்கள்
- waqulūbuhum
- وَّقُلُوبُهُمْ
- while their hearts
- அவர்களுடைய உள்ளங்களோ
- wajilatun
- وَجِلَةٌ
- (are) fearful
- பயந்தவையாக இருக்கும்
- annahum
- أَنَّهُمْ
- because they
- நிச்சயம் தாங்கள்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbihim
- رَبِّهِمْ
- their Lord
- தங்கள் இறைவனின்
- rājiʿūna
- رَٰجِعُونَ
- (will) return
- திரும்பக்கூடியவர்கள்
Transliteration:
Wallazeena yu'toona maaa aataw wa quloobuhum wajilatun annahum ilaa Rabbihim raaji'oon(QS. al-Muʾminūn:60)
English Sahih International:
And they who give what they give while their hearts are fearful because they will be returning to their Lord. (QS. Al-Mu'minun, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும், (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௦)
Jan Trust Foundation
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் கொடுப்பதை (-தர்மத்தை) கொடுப்பார்கள் (இவற்றையெல்லாம் அவர்கள் செய்வார்கள்) அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் தாங்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்று பயந்தவையாக இருக்கும்.