குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௦
Qur'an Surah Al-Mu'minun Verse 50
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗٓ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَآ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ ࣖ (المؤمنون : ٢٣)
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- And We made
- இன்னும் நாம் ஆக்கினோம்
- ib'na
- ٱبْنَ
- (the) son
- மகனையும்
- maryama
- مَرْيَمَ
- (of) Maryam
- மர்யமுடைய
- wa-ummahu
- وَأُمَّهُۥٓ
- and his mother
- அவருடைய தாயையும்
- āyatan
- ءَايَةً
- a Sign
- ஓர் அத்தாட்சியாக
- waāwaynāhumā
- وَءَاوَيْنَٰهُمَآ
- and We sheltered them
- இன்னும் அவ்விருவரையும் ஒதுங்க வைத்தோம்
- ilā rabwatin
- إِلَىٰ رَبْوَةٍ
- to a high ground
- உயரமானதின் பக்கம்
- dhāti
- ذَاتِ
- of tranquility
- உறுதியாக
- qarārin
- قَرَارٍ
- of tranquility
- சமமான இடத்திற்கும்
- wamaʿīnin
- وَمَعِينٍ
- and water springs
- ஓடும் நீரூற்றுக்கும்
Transliteration:
Wa ja'alnab na Maryama wa ummahooo aayatannw wa aawainaahumaaa ilaa rabwatin zaati qaraarinw wa ma'een(QS. al-Muʾminūn:50)
English Sahih International:
And We made the son of Mary and his mother a sign and sheltered them within a high ground having level [areas] and flowing water. (QS. Al-Mu'minun, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௦)
Jan Trust Foundation
மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம். இன்னும் அவ்விருவரையும் உறுதியான உயரமான சமமான இடத்திற்கும் ஓடும் நீரூற்றுக்கும் நாம் ஒதுங்க வைத்தோம்.