குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௪
Qur'an Surah Al-Mu'minun Verse 44
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَاۗ كُلَّمَا جَاۤءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ (المؤمنون : ٢٣)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- நாம் அனுப்பினோம்
- rusulanā
- رُسُلَنَا
- Our Messengers
- நமது தூதர்களை
- tatrā
- تَتْرَاۖ
- (in) succession
- தொடர்ச்சியாக
- kulla mā jāa
- كُلَّ مَا جَآءَ
- Every time Every time came
- வந்தபோதெல்லாம்
- ummatan
- أُمَّةً
- (to) a nation
- ஒரு சமுதாயத்திற்கு
- rasūluhā
- رَّسُولُهَا
- its Messenger
- அதன் தூதர்
- kadhabūhu
- كَذَّبُوهُۚ
- they denied him
- அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
- fa-atbaʿnā
- فَأَتْبَعْنَا
- so We made (them) follow
- ஆகவே, பின்னர் கொண்டு வந்தோம்
- baʿḍahum
- بَعْضَهُم
- some of them
- அவர்களில் சிலரை
- baʿḍan
- بَعْضًا
- others
- சிலரை
- wajaʿalnāhum
- وَجَعَلْنَٰهُمْ
- and We made them
- அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
- aḥādītha
- أَحَادِيثَۚ
- narrations
- படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக
- fabuʿ'dan
- فَبُعْدًا
- So away
- தொலைந்து போகட்டும்
- liqawmin
- لِّقَوْمٍ
- with a people
- மக்கள்
- lā yu'minūna
- لَّا يُؤْمِنُونَ
- not they believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
Transliteration:
Summa arsalnaa Rusulanaa tatraa kulla maa jaaa'a ummatar Rasooluhaa kazzabooh; fa atba'naa ba'dahum ba'danw wa ja'alnaahum ahaadees; fabu'dal liqawmil laa yu'minoon(QS. al-Muʾminūn:44)
English Sahih International:
Then We sent Our messengers in succession. Every time there came to a nation its messenger, they denied him, so We made them follow one another [to destruction], and We made them narrations. So away with a people who do not believe. (QS. Al-Mu'minun, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பிக் கொண்டே இருந்தோம். எவ்வகுப்பாரிடம் நம்முடைய தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௪)
Jan Trust Foundation
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை (அழித்து) சிலரை பின்னர் கொண்டு வந்தோம். அவர்களை (மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். நம்பிக்கை கொள்ளாத மக்கள் தொலைந்து போகட்டும்.