Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௧

Qur'an Surah Al-Mu'minun Verse 41

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنٰهُمْ غُثَاۤءًۚ فَبُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ (المؤمنون : ٢٣)

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
So seized them
அவர்களைப் பிடித்துக் கொண்டது
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
the awful cry
பெரிய சப்தம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
உண்மையில்
fajaʿalnāhum
فَجَعَلْنَٰهُمْ
and We made them
அவர்களை மாற்றி விடுவோம்
ghuthāan
غُثَآءًۚ
(as) rubbish of dead leaves
நுரைகளாக
fabuʿ'dan
فَبُعْدًا
So away
தொலைந்து போகட்டும்
lil'qawmi
لِّلْقَوْمِ
with the people -
கூட்டம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்கார

Transliteration:

Fa akhazat humus saihatu bilhaqqi faja'alnaahum ghusaaa'aa; fabu;dal lilqaw miz zaalimeen (QS. al-Muʾminūn:41)

English Sahih International:

So the shriek seized them in truth, and We made them as [plant] stubble. Then away with the wrongdoing people. (QS. Al-Mu'minun, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௧)

Jan Trust Foundation

அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையில் அவர்களை பெரிய சப்தம் பிடித்துக் கொண்டது. அவர்களை (எதற்கும் பயனற்ற) நுரைகளாக (அதைப் போன்று) மாற்றி விடுவோம். அநியாயக்கார கூட்டம் தொலைந்து போகட்டும்.