Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௭

Qur'an Surah Al-Mu'minun Verse 37

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۖ (المؤمنون : ٢٣)

in hiya
إِنْ هِىَ
Not it
இது
illā
إِلَّا
(is) but
தவிர
ḥayātunā
حَيَاتُنَا
our life
நமது வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலக
namūtu
نَمُوتُ
we die
நாம் இறந்து விடுகிறோம்
wanaḥyā
وَنَحْيَا
and we live
இன்னும் நாம் வாழ்கிறோம்
wamā
وَمَا
and not
இன்னும் அல்லர்
naḥnu
نَحْنُ
we
நாம்
bimabʿūthīna
بِمَبْعُوثِينَ
(will be) resurrected
எழுப்பப்படுபவர்கள்

Transliteration:

In hiya illaa hayaatunad dunyaa namootu wa nahyaa wa maa nahnu bimab'ooseen (QS. al-Muʾminūn:37)

English Sahih International:

It [i.e., life] is not but our worldly life – we die and live, but we will not be resurrected. (QS. Al-Mu'minun, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்து விடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩௭)

Jan Trust Foundation

“நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (-இந்த வாழ்க்கை) நமது உலக வாழ்க்கையைத் தவிர (வேறு) இல்லை. (மரணத்திற்குப் பின் ஒரு புதிய வாழ்க்கை இல்லை) நாம் இறந்து விடுகிறோம். நாம் வாழ்கிறோம். (நம்மில் சிலர் இறந்துவிட புதிதாக சிலர் பிறந்து வாழ்கின்றனர்.) நாம் (மறுமையில்) எழுப்பப்படுபவர்கள் அல்லர்.