குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௩
Qur'an Surah Al-Mu'minun Verse 33
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَاۤءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۙ مَا هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۙ يَأْكُلُ مِمَّا تَأْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ (المؤمنون : ٢٣)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினர்
- l-mala-u
- ٱلْمَلَأُ
- the chiefs
- தலைவர்கள்
- min qawmihi
- مِن قَوْمِهِ
- of his people
- அவருடைய மக்களில்
- alladhīna
- ٱلَّذِينَ
- who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- இன்னும் நிராகரித்தனர்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- and denied
- இன்னும் பொய்யாக்கினர்
- biliqāi
- بِلِقَآءِ
- (the) meeting
- சந்திப்பை
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- (of) the Hereafter
- மறுமையின்
- wa-atrafnāhum
- وَأَتْرَفْنَٰهُمْ
- while We had given them luxury
- நாம் அவர்களுக்கு செல்வத்தை வழங்கியிருந்தோம்
- fī l-ḥayati l-dun'yā
- فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
- in the life (of) the world
- உலக வாழ்வில்
- mā
- مَا
- "Not
- இல்லை
- hādhā
- هَٰذَآ
- (is) this
- இவர்
- illā
- إِلَّا
- but
- தவிர
- basharun
- بَشَرٌ
- a man
- மனிதரே
- mith'lukum
- مِّثْلُكُمْ
- like you
- உங்களைப் போன்ற
- yakulu
- يَأْكُلُ
- He eats
- அவர் சாப்பிடுகிறார்
- mimmā takulūna
- مِمَّا تَأْكُلُونَ
- of what you eat
- நீங்கள் சாப்பிடுவதிலிருந்து
- min'hu
- مِنْهُ
- [from it]
- அதில்
- wayashrabu
- وَيَشْرَبُ
- and he drinks
- இன்னும் அவர் குடிக்கிறார்
- mimmā tashrabūna
- مِمَّا تَشْرَبُونَ
- of what you drink
- நீங்கள் குடிப்பதிலிருந்து
Transliteration:
Wa qaalal mala-u min qawmihil lazeena kafaroo wa kazzaboo bi liqaaa'il Aakhirati wa atrafnaahum fil hayaatid dunyaa maa haazaaa illaa basharum mislukum yaakulu mimmaa taakuloona minhu wa yashrabu mimmaa tashraboon(QS. al-Muʾminūn:33)
English Sahih International:
And the eminent among his people who disbelieved and denied the meeting of the Hereafter while We had given them luxury in the worldly life said, "This is not but a man like yourselves. He eats of that from which you eat and drinks of what you drink. (QS. Al-Mu'minun, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
(ஹூத் நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவைகளையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி ("ஹூத்" நபியை சுட்டிக் காண்பித்து) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனேயன்றி வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩௩)
Jan Trust Foundation
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருடைய மக்களில் நிராகரித்து மறுமையின் சந்திப்பை பொய்யாக்கிய தலைவர்கள் கூறினர். - அவர்களுக்கு நாம் உலக வாழ்வில் செல்வத்தை வழங்கியிருந்தோம். - இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறு இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார் இன்னும் நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.