Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௨

Qur'an Surah Al-Mu'minun Verse 32

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اَفَلَا تَتَّقُوْنَ ࣖ (المؤمنون : ٢٣)

fa-arsalnā
فَأَرْسَلْنَا
And We sent
நாம் அனுப்பினோம்
fīhim
فِيهِمْ
among them
அவர்களில்
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை
min'hum
مِّنْهُمْ
from themselves
அவர்களில்
ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
[that] "Worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah;
அல்லாஹ்வை
مَا
not
இல்லை
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
(is) any god
வணங்கத்தகுதியான (வேறு) கடவுள் யாரும்
ghayruhu
غَيْرُهُۥٓۖ
other than Him
அவனையன்றி
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
Then will not you fear?"
நீங்கள் அஞ்ச வேண்டாமா?

Transliteration:

Fa arsalnaa feehim Rasoolam minhum ani'budul laaha maa lakum min ilaahin ghairuhoo afalaa tattaqoon (QS. al-Muʾminūn:32)

English Sahih International:

And We sent among them a messenger from themselves, [saying], "Worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?" (QS. Al-Mu'minun, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

அவர்களில் உள்ள ("ஹூத்" என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம்முடைய தூதராக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?" (என்று கூறினார்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩௨)

Jan Trust Foundation

அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் ஒரு தூதரை அவர்களில் இருந்தே நாம் அனுப்பினோம். (அவர் கூறினார்) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணங்கத் தகுதியான (வேறு) கடவுள் யாரும் உங்களுக்கு இல்லை. (அவனது தண்டனையை) நீங்கள் அஞ்ச வேண்டாமா?