குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௯
Qur'an Surah Al-Mu'minun Verse 29
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِيْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ (المؤمنون : ٢٣)
- waqul
- وَقُل
- And say
- இன்னும் கூறுவீராக
- rabbi
- رَّبِّ
- "My Lord
- என் இறைவா
- anzil'nī
- أَنزِلْنِى
- cause me to land
- என்னை தங்க வைப்பாயாக
- munzalan
- مُنزَلًا
- (at) a landing place
- ஓர் இடத்தில்
- mubārakan
- مُّبَارَكًا
- blessed
- அருள் நிறைந்த
- wa-anta
- وَأَنتَ
- and You
- நீ
- khayru
- خَيْرُ
- (are) the Best
- மிகச் சிறந்தவன்
- l-munzilīna
- ٱلْمُنزِلِينَ
- (of) those who cause to land'"
- தங்க வைப்பவர்களில்
Transliteration:
Wa qur Rabbi anzilnee munzalam mubaarakanw wa Anta khairul munzileen(QS. al-Muʾminūn:29)
English Sahih International:
And say, 'My Lord, let me land at a blessed landing place, and You are the best to accommodate [us].'" (QS. Al-Mu'minun, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
அன்றி "என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக (பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலிலிருந்து) இறக்கி வைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்தியுங்கள்" (என்றும் கூறினோம்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௯)
Jan Trust Foundation
மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் கூறுவீராக! “என் இறைவா! (உன்) அருள் நிறைந்த ஓர் இடத்தில் என்னை தங்க வைப்பாயாக! நீ தங்க வைப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”