Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௪

Qur'an Surah Al-Mu'minun Verse 24

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۙ يُرِيْدُ اَنْ يَّتَفَضَّلَ عَلَيْكُمْۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰۤىِٕكَةً ۖمَّا سَمِعْنَا بِهٰذَا فِيْٓ اٰبَاۤىِٕنَا الْاَوَّلِيْنَ ۚ (المؤمنون : ٢٣)

faqāla
فَقَالَ
But said
கூறினர்
l-mala-u
ٱلْمَلَؤُا۟
the chiefs
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
min qawmihi
مِن قَوْمِهِۦ
among his people
அவருடைய மக்களில்
مَا
"This is not
இல்லை
hādhā
هَٰذَآ
"This is not
இவர்
illā
إِلَّا
but
தவிர
basharun
بَشَرٌ
a man
மனிதரே
mith'lukum
مِّثْلُكُمْ
like you
உங்களைப் போன்ற
yurīdu
يُرِيدُ
he wishes
அவர் நாடுகிறார்
an yatafaḍḍala
أَن يَتَفَضَّلَ
to assert (his) superiority
மேன்மை அடைய
ʿalaykum
عَلَيْكُمْ
over you
உங்கள் மீது
walaw shāa
وَلَوْ شَآءَ
and if Allah had willed
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah had willed
அல்லாஹ்
la-anzala
لَأَنزَلَ
surely He (would have) sent down
இறக்கி இருப்பான்
malāikatan
مَلَٰٓئِكَةً
Angels
வானவர்களை
mā samiʿ'nā
مَّا سَمِعْنَا
Not we heard
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
bihādhā
بِهَٰذَا
of this
இதை
fī ābāinā
فِىٓ ءَابَآئِنَا
from our forefathers
எங்கள் மூதாதைகளில்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
our forefathers
முன்னோர்களான

Transliteration:

Faqaalal mala'ul lazeena kafaroo min qawmihee maa haazaaa illaa basharum mislukum yureedu ai yatafaddala 'alaikum wa law shaaa'al laahu la anzala malaaa'ikatam maa sami'naa bihaazaa feee aabaaa'inal awwaleen (QS. al-Muʾminūn:24)

English Sahih International:

But the eminent among those who disbelieved from his people said, "This is not but a man like yourselves who wishes to take precedence over you; and if Allah had willed [to send a messenger], He would have sent down angels. We have not heard of this among our forefathers. (QS. Al-Mu'minun, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தம்முடைய மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் மலக்குகளையே அனுப்பி வைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும், (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்| “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருடைய மக்களில் நிராகரித்த தலைவர்கள் கூறினர்: இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறு இல்லை. அவர் உங்கள் மீது மேன்மை அடைய நாடுகிறார். அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்களை இறக்கி இருப்பான். இதை எங்கள் முன்னோர்களான மூதாதைகளில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.