Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௧

Qur'an Surah Al-Mu'minun Verse 21

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ لَكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةًۗ نُسْقِيْكُمْ مِّمَّا فِيْ بُطُوْنِهَا وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَأْكُلُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
fī l-anʿāmi
فِى ٱلْأَنْعَٰمِ
in the cattle
கால்நடையில்
laʿib'ratan
لَعِبْرَةًۖ
surely (is) a lesson
ஒரு படிப்பினை
nus'qīkum
نُّسْقِيكُم
We give you drink
உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்
mimmā fī buṭūnihā
مِّمَّا فِى بُطُونِهَا
from what (is) in their bellies
அவற்றின் வயிற்றிலிருந்து
walakum
وَلَكُمْ
and for you
இன்னும் உங்களுக்கு
fīhā
فِيهَا
in them
அவற்றில்
manāfiʿu
مَنَٰفِعُ
(are) benefits
பலன்களும்
kathīratun
كَثِيرَةٌ
many
அதிகமான
wamin'hā
وَمِنْهَا
and of them
இன்னும் அவற்றிலிருந்து
takulūna
تَأْكُلُونَ
you eat
நீங்கள் புசியுங்கள்

Transliteration:

Wa inna lakum fil an'aami la'ibrah; nusqeekum mimmaa fee butoonihaa wa lakum feehaa manaafi'u kaseeratunw wa minhaa taakuloon (QS. al-Muʾminūn:21)

English Sahih International:

And indeed, for you in livestock is a lesson. We give you drink from that which is in their bellies, and for you in them are numerous benefits, and from them you eat. (QS. Al-Mu'minun, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அன்றி, உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௧)

Jan Trust Foundation

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக கால்நடையில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலிருந்து (வெளிவரக்கூடிய பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அதிகமான பலன்களும் உள்ளன. அவற்றிலிருந்து (கிடைக்கும் மாமிசத்தையும்) நீங்கள் புசியுங்கள்.