Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௭

Qur'an Surah Al-Mu'minun Verse 17

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَاۤىِٕقَۖ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غٰفِلِيْنَ (المؤمنون : ٢٣)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
We (have) created
நாம் படைத்தோம்
fawqakum
فَوْقَكُمْ
above you
உங்களுக்கு மேல்
sabʿa
سَبْعَ
seven
ஏழு
ṭarāiqa
طَرَآئِقَ
paths
வானங்களை
wamā kunnā
وَمَا كُنَّا
and not We are
நாம் இருக்கவில்லை
ʿani l-khalqi
عَنِ ٱلْخَلْقِ
of the creation
படைப்பைப் பற்றி
ghāfilīna
غَٰفِلِينَ
unaware
கவனமற்றவர்களாக

Transliteration:

Wa laqad khalaqnaa fawqakum sab'a taraaa'iqa wa maa kunnaa 'anil khalqi ghaafileen (QS. al-Muʾminūn:17)

English Sahih International:

And We have created above you seven layered heavens, and never have We been of [Our] creation unaware. (QS. Al-Mu'minun, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவைகளைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக உங்களுக்கு மேல் ஏழு வானங்களை நாம் படைத்தோம். (-அந்த வானங்களுக்கு கீழே உள்ள நமது) படைப்பைப் பற்றி நாம் கவனமற்றவர்களாக இருக்கவில்லை.