Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 9

Al-Mu'minun

(al-Muʾminūn)

௮௧

بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ ٨١

bal qālū
بَلْ قَالُوا۟
மாறாக கூறினர்
mith'la
مِثْلَ
போன்றே
mā qāla
مَا قَالَ
கூறியது
l-awalūna
ٱلْأَوَّلُونَ
முன்னோர்கள்
என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௧)
Tafseer
௮௨

قَالُوْٓا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ٨٢

qālū
قَالُوٓا۟
கூறினர்
a-idhā mit'nā
أَءِذَا مِتْنَا
?/நாங்கள் இறந்து விட்டால்
wakunnā
وَكُنَّا
இன்னும் மாறிவிட்டால்
turāban
تُرَابًا
மண்ணாகவும்
waʿiẓāman
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
a-innā
أَءِنَّا
நிச்சயமாக நாங்கள்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோமா
(அதாவது:) "நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப் படுவோமா?" என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௨)
Tafseer
௮௩

لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَاۤؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ٨٣

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
wuʿid'nā
وُعِدْنَا
வாக்களிக்கப்பட்டோம்
naḥnu
نَحْنُ
நாங்களும்
waābāunā
وَءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகளும்
hādhā
هَٰذَا
இதை
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
in hādhā
إِنْ هَٰذَآ
இது வேறில்லை
illā
إِلَّآ
தவிர
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளே
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்
(அன்றி) "நிச்சயமாக நாமும் நம்முடைய மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதையே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௩)
Tafseer
௮௪

قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَآ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٨٤

qul
قُل
கூறுவீராக
limani
لِّمَنِ
எவனுக்கு சொந்தம்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமியும்
waman fīhā
وَمَن فِيهَآ
இன்னும் அதில் உள்ளவர்களும்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக
(ஆகவே நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "பூமியும் அதில் உள்ளவைகளும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்" எனக் கேளுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௪)
Tafseer
௮௫

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗقُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ ٨٥

sayaqūlūna
سَيَقُولُونَ
கூறுவார்கள்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
qul
قُلْ
கூறுவீராக
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா
அதற்கவர்கள் "அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேளுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௫)
Tafseer
௮௬

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ٨٦

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்
rabbu
رَّبُّ
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
l-sabʿi
ٱلسَّبْعِ
ஏழு
warabbu
وَرَبُّ
இன்னும் இறைவன் யார்
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான
அன்றி "ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?" என்று கேளுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௬)
Tafseer
௮௭

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ٨٧

sayaqūlūna
سَيَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
qul
قُلْ
நீர் கூறுவீராக
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
ஆகவே நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
அதற்கவர்கள் "யாவும் அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் அவனுக்கு பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௭)
Tafseer
௮௮

قُلْ مَنْۢ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَيْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٨٨

qul
قُلْ
கூறுவீராக
man
مَنۢ
யாருடைய
biyadihi
بِيَدِهِۦ
அவனுடைய கரத்தில் இருக்கிறது
malakūtu
مَلَكُوتُ
பேராட்சி
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
wahuwa
وَهُوَ
அவன்தான்
yujīru
يُجِيرُ
பாதுகாப்பு அளிக்கின்றான்
walā yujāru
وَلَا يُجَارُ
இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படாது
ʿalayhi
عَلَيْهِ
அவனுக்கு எதிராக
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக
அன்றி "எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக்) கூறுங்கள்" எனக் கேளுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௮)
Tafseer
௮௯

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗقُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ ٨٩

sayaqūlūna
سَيَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கு உரியதே
qul
قُلْ
நீர் கூறுவீராக
fa-annā
فَأَنَّىٰ
ஆக, எவ்வாறு
tus'ḥarūna
تُسْحَرُونَ
திருப்பப்படுகிறீர்கள்
அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) "அல்லாஹ்வுக் குரியதுதான்" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?" என்று கேளுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௯)
Tafseer
௯௦

بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ٩٠

bal
بَلْ
மாறாக
ataynāhum
أَتَيْنَٰهُم
நாம் அவர்களுக்கு கொண்டு வந்துள்ளோம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையை
wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதனை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே! ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯௦)
Tafseer