Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 8

Al-Mu'minun

(al-Muʾminūn)

௭௧

وَلَوِ اتَّبَعَ الْحَقُّ اَهْوَاۤءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّۗ بَلْ اَتَيْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَ ۗ ٧١

walawi ittabaʿa
وَلَوِ ٱتَّبَعَ
பின்பற்றினால்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையாளன்
ahwāahum
أَهْوَآءَهُمْ
விருப்பங்களை அவர்களது
lafasadati
لَفَسَدَتِ
நாசமடைந்து இருப்பார்கள்
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
வானங்களும்
wal-arḍu
وَٱلْأَرْضُ
இன்னும் பூமியும்
waman fīhinna
وَمَن فِيهِنَّۚ
இன்னும் அவற்றில் உள்ளவர்களும்
bal ataynāhum
بَلْ أَتَيْنَٰهُم
மாறாக அவர்களுக்குக் கொடுத்தோம்
bidhik'rihim
بِذِكْرِهِمْ
அவர்களுக்குரிய விளக்கத்தை
fahum
فَهُمْ
ஆனால் அவர்கள்
ʿan
عَن
கூறப்பட்ட விளக்கத்தை
dhik'rihim
ذِكْرِهِم
கூறப்பட்ட விளக்கத்தை தங்களுக்கு
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிக்கக் கூடியவர்கள்
சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவைகளும் அழிந்துவிடும். ஆகவே, அவர்களுக்கு நல் உபதேசத்தையே அனுப்பினோம். எனினும், அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தையே புறக்கணித்து விட்டனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௧)
Tafseer
௭௨

اَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ ۖوَّهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ ٧٢

am
أَمْ
அல்லது
tasaluhum
تَسْـَٔلُهُمْ
அவர்களிடம் நீர் எதையும் கேட்கிறீரா
kharjan
خَرْجًا
கூலி
fakharāju
فَخَرَاجُ
எனவே கூலிதான்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
khayrun
خَيْرٌۖ
மிகச் சிறந்தது
wahuwa
وَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
கொடை வழங்குபவர்களில்
அல்லது, நீங்கள் அவர்களிடம் யாதொரு கூலியையும் கேட்கின்றீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உங்களது இறைவன் (உங்களுக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாக இருக்கிறது. அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௨)
Tafseer
௭௩

وَاِنَّكَ لَتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٧٣

wa-innaka
وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
latadʿūhum
لَتَدْعُوهُمْ
அழைக்கிறீர் அவர்களை
ilā
إِلَىٰ
பக்கம்
ṣirāṭin
صِرَٰطٍ
பாதையின்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
(நபியே!) நிச்சயமாக நீங்கள் அவர்களை நேரான வழிக்கே அழைக்கின்றீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௩)
Tafseer
௭௪

وَاِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُوْنَ ٧٤

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
ʿani l-ṣirāṭi
عَنِ ٱلصِّرَٰطِ
பாதையை விட்டு
lanākibūna
لَنَٰكِبُونَ
விலகக்கூடியவர்கள்தான்
எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக அவர்கள் நேரான வழியைப் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௪)
Tafseer
௭௫

۞ وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّلَجُّوْا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ٧٥

walaw raḥim'nāhum
وَلَوْ رَحِمْنَٰهُمْ
அவர்கள் மீது நாம் கருணை புரிந்தால்
wakashafnā
وَكَشَفْنَا
இன்னும் நாம் நீக்கி விட்டால்
mā bihim
مَا بِهِم
அவர்களுக்குள்ள
min ḍurrin
مِّن ضُرٍّ
தீங்கை
lalajjū
لَّلَجُّوا۟
பிடிவாதம் பிடித்திருப்பார்கள்
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
தங்களது வரம்பு மீறுவதில்தான்
yaʿmahūna
يَعْمَهُونَ
அவர்கள் தடுமாறியவர்களாக
நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்களுடைய வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௫)
Tafseer
௭௬

وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُوْنَ ٧٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
akhadhnāhum
أَخَذْنَٰهُم
அவர்களை நாம் பிடித்தோம்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
வேதனையைக் கொண்டு
famā is'takānū
فَمَا ٱسْتَكَانُوا۟
அவர்கள் பணியவில்லை
lirabbihim
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
wamā yataḍarraʿūna
وَمَا يَتَضَرَّعُونَ
இன்னும் மன்றாடவும் இல்லை
நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௬)
Tafseer
௭௭

حَتّٰٓى اِذَا فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِيْدٍ اِذَا هُمْ فِيْهِ مُبْلِسُوْنَ ࣖ ٧٧

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā fataḥnā
إِذَا فَتَحْنَا
நாம் திறந்தால்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
bāban
بَابًا
ஒரு கதவை
dhā ʿadhābin
ذَا عَذَابٍ
வேதனையுடைய
shadīdin
شَدِيدٍ
கடுமையான
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
fīhi mub'lisūna
فِيهِ مُبْلِسُونَ
அதில்/ கவலைப்பட்டவர்களாக
அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௭)
Tafseer
௭௮

وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ ٧٨

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
ansha-a lakumu
أَنشَأَ لَكُمُ
உங்களுக்கு ஏற்படுத்தினான்
l-samʿa
ٱلسَّمْعَ
செவியையும்
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
பார்வையையும்
wal-afidata
وَٱلْأَفْـِٔدَةَۚ
உள்ளங்களையும்
qalīlan
قَلِيلًا
குறைவாகவே
mā tashkurūna
مَّا تَشْكُرُونَ
நீங்கள் நன்றிசெலுத்துகிறீர்கள்
அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௮)
Tafseer
௭௯

وَهُوَ الَّذِيْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ ٧٩

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
dhara-akum
ذَرَأَكُمْ
உங்களை படைத்தான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவனிடம்தான்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
நீங்கள் எழுப்பப்படுவீர்கள்
அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசித்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௯)
Tafseer
௮௦

وَهُوَ الَّذِيْ يُحْيٖ وَيُمِيْتُ وَلَهُ اخْتِلَافُ الَّيْلِ وَالنَّهَارِۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٨٠

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
இன்னும் அவன்தான்
yuḥ'yī
يُحْىِۦ
உயிர் கொடுக்கின்றான்
wayumītu
وَيُمِيتُ
இன்னும் மரணத்தை தருகிறான்
walahu
وَلَهُ
அவனுடையதுதான்
ikh'tilāfu
ٱخْتِلَٰفُ
மாறிமாறி வருவதும்
al-layli
ٱلَّيْلِ
இரவு
wal-nahāri
وَٱلنَّهَارِۚ
இன்னும் பகல்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮௦)
Tafseer