Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 7

Al-Mu'minun

(al-Muʾminūn)

௬௧

اُولٰۤىِٕكَ يُسَارِعُوْنَ فِى الْخَيْرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ ٦١

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
விரைகின்றார்கள்
fī l-khayrāti
فِى ٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lahā
لَهَا
அவற்றுக்கு
sābiqūna
سَٰبِقُونَ
முந்தக் கூடியவர்கள்
ஆகிய இவர்கள்தாம் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கின்றவர்கள். மேலும், அவர்கள் அதை (செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௧)
Tafseer
௬௨

وَلَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۖ وَلَدَيْنَا كِتٰبٌ يَّنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٦٢

walā nukallifu
وَلَا نُكَلِّفُ
நாம் சிரமம் தருவதில்லை
nafsan
نَفْسًا
எந்த ஓர் ஆன்மாவுக்கும்
illā
إِلَّا
தவிர
wus'ʿahā
وُسْعَهَاۖ
அதன் வசதிக்கு உட்பட்டே
waladaynā
وَلَدَيْنَا
இன்னும் நம்மிடம் இருக்கின்றது
kitābun
كِتَٰبٌ
ஒரு புத்தகம்
yanṭiqu
يَنطِقُ
பேசுகின்றது
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
சத்தியத்தைக் கொண்டு
wahum
وَهُمْ
அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
நாம் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. ஒவ்வொருவரின் மெய்யான தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கின்றது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௨)
Tafseer
௬௩

بَلْ قُلُوْبُهُمْ فِيْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عَامِلُوْنَ ٦٣

bal
بَلْ
மாறாக
qulūbuhum
قُلُوبُهُمْ
அவர்களது உள்ளங்கள்
fī ghamratin
فِى غَمْرَةٍ
அறியாமையில்
min hādhā
مِّنْ هَٰذَا
இதை விட்டு
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
aʿmālun
أَعْمَٰلٌ
செயல்கள்
min dūni dhālika
مِّن دُونِ ذَٰلِكَ
வேறு உள்ளன
hum
هُمْ
அவர்கள்
lahā
لَهَا
அதைத்தான்
ʿāmilūna
عَٰمِلُونَ
செய்பவர்கள்
எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதனையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய) காரியங்களும் இருக்கின்றன. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௩)
Tafseer
௬௪

حَتّٰٓى اِذَآ اَخَذْنَا مُتْرَفِيْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ يَجْـَٔرُوْنَ ۗ ٦٤

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā akhadhnā
إِذَآ أَخَذْنَا
நாம் பிடித்தால்
mut'rafīhim
مُتْرَفِيهِم
அவர்களின் சுகவாசிகளை
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
வேதனையைக் கொண்டு
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
yajarūna
يَجْـَٔرُونَ
கதறுகின்றனர்
ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) அபய சப்தமிடுகின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௪)
Tafseer
௬௫

لَا تَجْـَٔرُوا الْيَوْمَۖ اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ ٦٥

lā tajarū
لَا تَجْـَٔرُوا۟
கதறாதீர்கள்
l-yawma
ٱلْيَوْمَۖ
இன்றைய தினம்
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
minnā
مِّنَّا
நம்மிடமிருந்து
lā tunṣarūna
لَا تُنصَرُونَ
பாதுகாக்கப்பட மாட்டீர்கள்
(அச்சமயம் அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் அபயமிட்டு சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௫)
Tafseer
௬௬

قَدْ كَانَتْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ تَنْكِصُوْنَ ۙ ٦٦

qad
قَدْ
திட்டமாக
kānat
كَانَتْ
இருந்தன
āyātī
ءَايَٰتِى
எனது வசனங்கள்
tut'lā
تُتْلَىٰ
ஓதப்பட்டும்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fakuntum
فَكُنتُمْ
நீங்கள் இருந்தீர்கள்
ʿalā
عَلَىٰٓ
மீது
aʿqābikum
أَعْقَٰبِكُمْ
உங்கள் குதிங்கால்கள்
tankiṣūna
تَنكِصُونَ
பின்னோக்கி செல்பவர்களாக
நிச்சயமாக நம்முடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அதனைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௬)
Tafseer
௬௭

مُسْتَكْبِرِيْنَۙ بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ ٦٧

mus'takbirīna
مُسْتَكْبِرِينَ
பெருமை அடித்தவர்களாக
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
sāmiran
سَٰمِرًا
இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக
tahjurūna
تَهْجُرُونَ
வீணானதைக் கூறுகின்றனர்
நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படும்). ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௭)
Tafseer
௬௮

اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَاۤءَهُمْ مَّا لَمْ يَأْتِ اٰبَاۤءَهُمُ الْاَوَّلِيْنَ ۖ ٦٨

afalam yaddabbarū
أَفَلَمْ يَدَّبَّرُوا۟
இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா
l-qawla
ٱلْقَوْلَ
இந்த பேச்சை
am
أَمْ
அல்லது
jāahum
جَآءَهُم
வந்ததா இவர்களிடம்
mā lam yati
مَّا لَمْ يَأْتِ
எது/வரவில்லை
ābāahumu
ءَابَآءَهُمُ
மூதாதைகளுக்கு இவர்களது
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான
(நம்முடைய) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா? ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௮)
Tafseer
௬௯

اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۖ ٦٩

am
أَمْ
அல்லது
lam yaʿrifū
لَمْ يَعْرِفُوا۟
அறியவில்லையா
rasūlahum
رَسُولَهُمْ
தங்களது தூதரை
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lahu
لَهُۥ
அவரை
munkirūna
مُنكِرُونَ
மறுக்கின்றனரா
அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா? ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௯)
Tafseer
௭௦

اَمْ يَقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ ۗ بَلْ جَاۤءَهُمْ بِالْحَقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ٧٠

am
أَمْ
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
இவர்கள் கூறுகின்றனரா
bihi
بِهِۦ
அவருக்கு
jinnatun
جِنَّةٌۢۚ
பைத்தியம்
bal
بَلْ
மாறாக
jāahum
جَآءَهُم
வந்துள்ளார் அவர்களிடம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
wa-aktharuhum
وَأَكْثَرُهُمْ
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்
lil'ḥaqqi
لِلْحَقِّ
உண்மையை
kārihūna
كَٰرِهُونَ
வெறுக்கின்றார்கள்
அல்லது "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றது" என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம்முடைய தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭௦)
Tafseer