Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 6

Al-Mu'minun

(al-Muʾminūn)

௫௧

يٰٓاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًاۗ اِنِّيْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ۗ ٥١

yāayyuhā l-rusulu
يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ
தூதர்களே
kulū
كُلُوا۟
சாப்பிடுங்கள்
mina l-ṭayibāti
مِنَ ٱلطَّيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
wa-iʿ'malū
وَٱعْمَلُوا۟
இன்னும் செய்யுங்கள்
ṣāliḥan
صَٰلِحًاۖ
நல்ல செயலை
innī
إِنِّى
நிச்சயமாக நான்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௧)
Tafseer
௫௨

وَاِنَّ هٰذِهٖٓ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا۠ رَبُّكُمْ فَاتَّقُوْنِ ٥٢

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
hādhihi
هَٰذِهِۦٓ
இதுதான்
ummatukum
أُمَّتُكُمْ
உங்களது மார்க்கம்
ummatan wāḥidatan
أُمَّةً وَٰحِدَةً
மார்க்கம்/ஒரே ஒரு
wa-anā
وَأَنَا۠
நான்தான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
fa-ittaqūni
فَٱتَّقُونِ
ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்
நிச்சயமாக உங்களுடைய இந்த மார்க்கம் ஒரே வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நானே உங்களுடைய இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்" (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௨)
Tafseer
௫௩

فَتَقَطَّعُوْٓا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًاۗ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ ٥٣

fataqaṭṭaʿū
فَتَقَطَّعُوٓا۟
அவர்கள் பிரித்துக் கொண்டனர்
amrahum
أَمْرَهُم
காரியத்தை தங்களது
baynahum
بَيْنَهُمْ
தங்களுக்கு மத்தியில்
zuburan
زُبُرًاۖ
பல வேதங்களாக
kullu
كُلُّ
ஒவ்வொரு
ḥiz'bin
حِزْبٍۭ
பிரிவும்
bimā ladayhim
بِمَا لَدَيْهِمْ
தங்களிடம் உள்ளதைக் கொண்டு
fariḥūna
فَرِحُونَ
பெருமைப்படுகின்றனர்
எனினும், (யூதர்கள்) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௩)
Tafseer
௫௪

فَذَرْهُمْ فِيْ غَمْرَتِهِمْ حَتّٰى حِيْنٍ ٥٤

fadharhum
فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
fī ghamratihim
فِى غَمْرَتِهِمْ
அவர்களுடைய வழிகேட்டில்
ḥattā
حَتَّىٰ
வரை
ḥīnin
حِينٍ
காலம்
(நபியே!) நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டுவிடுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௪)
Tafseer
௫௫

اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَ ۙ ٥٥

ayaḥsabūna
أَيَحْسَبُونَ
அவர்கள் எண்ணுகின்றனரா
annamā
أَنَّمَا
நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ
numidduhum
نُمِدُّهُم
நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ அவர்களுக்கு
bihi
بِهِۦ
அதை
min mālin
مِن مَّالٍ
செல்வத்திலிருந்தும்
wabanīna
وَبَنِينَ
ஆண் பிள்ளைகளிலிருந்தும்
நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்? ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௫)
Tafseer
௫௬

نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْرٰتِۗ بَلْ لَّا يَشْعُرُوْنَ ٥٦

nusāriʿu
نُسَارِعُ
நாம் விரைகிறோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-khayrāti
فِى ٱلْخَيْرَٰتِۚ
நன்மைகளில்
bal
بَل
மாறாக
lā yashʿurūna
لَّا يَشْعُرُونَ
அவர்கள் உணர மாட்டார்கள்
இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௬)
Tafseer
௫௭

اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۙ ٥٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hum
هُم
அவர்கள்
min khashyati
مِّنْ خَشْيَةِ
பயத்தால்
rabbihim
رَبِّهِم
தங்கள் இறைவனின்
mush'fiqūna
مُّشْفِقُونَ
அச்சம் கொண்டவர்கள்
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௭)
Tafseer
௫௮

وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ ۙ ٥٨

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُم
இன்னும் எவர்கள்/அவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்பவர்கள்
எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களும், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௮)
Tafseer
௫௯

وَالَّذِيْنَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُوْنَ ۙ ٥٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُم
அவர்கள்
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
lā yush'rikūna
لَا يُشْرِكُونَ
இணைவைக்காதவர்கள்
எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௯)
Tafseer
௬௦

وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَآ اٰتَوْا وَّقُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ ٦٠

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் அவர்கள்
yu'tūna
يُؤْتُونَ
கொடுப்பார்கள்
mā ātaw
مَآ ءَاتَوا۟
எதைக் கொடுத்தார்கள்
waqulūbuhum
وَّقُلُوبُهُمْ
அவர்களுடைய உள்ளங்களோ
wajilatun
وَجِلَةٌ
பயந்தவையாக இருக்கும்
annahum
أَنَّهُمْ
நிச்சயம் தாங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
rājiʿūna
رَٰجِعُونَ
திரும்பக்கூடியவர்கள்
எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬௦)
Tafseer