Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 5

Al-Mu'minun

(al-Muʾminūn)

௪௧

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنٰهُمْ غُثَاۤءًۚ فَبُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ ٤١

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்துக் கொண்டது
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
பெரிய சப்தம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையில்
fajaʿalnāhum
فَجَعَلْنَٰهُمْ
அவர்களை மாற்றி விடுவோம்
ghuthāan
غُثَآءًۚ
நுரைகளாக
fabuʿ'dan
فَبُعْدًا
தொலைந்து போகட்டும்
lil'qawmi
لِّلْقَوْمِ
கூட்டம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார
ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௧)
Tafseer
௪௨

ثُمَّ اَنْشَأْنَا مِنْۢ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَ ۗ ٤٢

thumma
ثُمَّ
பிறகு
anshanā
أَنشَأْنَا
நாம் உருவாக்கினோம்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
qurūnan
قُرُونًا
தலைமுறைகளை
ākharīna
ءَاخَرِينَ
வேறு (பல)
இவர்களுக்குப் பின்னரும் நாம் மற்ற வகுப்பினர் பலரை உற்பத்தி செய்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௨)
Tafseer
௪௩

مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُوْنَ ۗ ٤٣

mā tasbiqu
مَا تَسْبِقُ
முந்தவும் மாட்டார்கள்
min ummatin
مِنْ أُمَّةٍ
எந்த ஒரு சமுதாயம்
ajalahā
أَجَلَهَا
தனது தவணையை
wamā yastakhirūna
وَمَا يَسْتَـْٔخِرُونَ
இன்னும் பிந்தவும் மாட்டார்கள்
(அவர்களில் எனக்கு மாறு செய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (அவர்களுக்கு ஏற்பட்ட தவணையில் அழிந்து விட்டனர்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௩)
Tafseer
௪௪

ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَاۗ كُلَّمَا جَاۤءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ ٤٤

thumma
ثُمَّ
பிறகு
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
rusulanā
رُسُلَنَا
நமது தூதர்களை
tatrā
تَتْرَاۖ
தொடர்ச்சியாக
kulla mā jāa
كُلَّ مَا جَآءَ
வந்தபோதெல்லாம்
ummatan
أُمَّةً
ஒரு சமுதாயத்திற்கு
rasūluhā
رَّسُولُهَا
அதன் தூதர்
kadhabūhu
كَذَّبُوهُۚ
அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
fa-atbaʿnā
فَأَتْبَعْنَا
ஆகவே, பின்னர் கொண்டு வந்தோம்
baʿḍahum
بَعْضَهُم
அவர்களில் சிலரை
baʿḍan
بَعْضًا
சிலரை
wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
அவர்களை நாம் ஆக்கிவிட்டோம்
aḥādītha
أَحَادِيثَۚ
படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக
fabuʿ'dan
فَبُعْدًا
தொலைந்து போகட்டும்
liqawmin
لِّقَوْمٍ
மக்கள்
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பிக் கொண்டே இருந்தோம். எவ்வகுப்பாரிடம் நம்முடைய தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௪)
Tafseer
௪௫

ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ەۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ ٤٥

thumma
ثُمَّ
பிறகு
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
mūsā
مُوسَىٰ
மூஸாவையும்
wa-akhāhu
وَأَخَاهُ
இன்னும் அவருடையசகோதரர்
hārūna
هَٰرُونَ
ஹாரூனையும்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளைக் கொண்டும்
wasul'ṭānin
وَسُلْطَٰنٍ
இன்னும் ஆதாரத்தைக் கொண்டும்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
பின்னர் நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம்முடைய வசனங்களையும், தெளிவான ஆதாரங்களையும் கொடுத்து (நம்முடைய தூதராக) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௫)
Tafseer
௪௬

اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِيْنَ ۚ ٤٦

ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடமும்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும்
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
wakānū
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
qawman
قَوْمًا
மக்களாக
ʿālīna
عَالِينَ
ஆதிக்கம் செலுத்தக்கூடிய
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் அனுப்பி வைத்தோம். அவர்களோ கர்வம்கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௬)
Tafseer
௪௭

فَقَالُوْٓا اَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عٰبِدُوْنَ ۚ ٤٧

faqālū
فَقَالُوٓا۟
கூறினர்
anu'minu
أَنُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்வோமா
libasharayni
لِبَشَرَيْنِ
இரு மனிதர்களை
mith'linā
مِثْلِنَا
எங்களைப் போன்ற
waqawmuhumā
وَقَوْمُهُمَا
அவ்விருவரின் சமுதாயமோ
lanā
لَنَا
எங்களுக்கு
ʿābidūna
عَٰبِدُونَ
பணிந்தவர்களாக இருக்கின்றனர்
நம்மைப் போன்றே மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௭)
Tafseer
௪௮

فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَكِيْنَ ٤٨

fakadhabūhumā
فَكَذَّبُوهُمَا
அவர்கள் பொய்ப்பித்தனர் அவ்விருவரையும்
fakānū
فَكَانُوا۟
ஆகவே, அவர்கள் ஆகிவிட்டனர்
mina l-muh'lakīna
مِنَ ٱلْمُهْلَكِينَ
அழிக்கப்பட்டவர்களில்
ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௮)
Tafseer
௪௯

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ ٤٩

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
laʿallahum yahtadūna
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௯)
Tafseer
௫௦

وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗٓ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَآ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ ࣖ ٥٠

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கினோம்
ib'na
ٱبْنَ
மகனையும்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
wa-ummahu
وَأُمَّهُۥٓ
அவருடைய தாயையும்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
waāwaynāhumā
وَءَاوَيْنَٰهُمَآ
இன்னும் அவ்விருவரையும் ஒதுங்க வைத்தோம்
ilā rabwatin
إِلَىٰ رَبْوَةٍ
உயரமானதின் பக்கம்
dhāti
ذَاتِ
உறுதியாக
qarārin
قَرَارٍ
சமமான இடத்திற்கும்
wamaʿīnin
وَمَعِينٍ
ஓடும் நீரூற்றுக்கும்
மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫௦)
Tafseer