Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 4

Al-Mu'minun

(al-Muʾminūn)

௩௧

ثُمَّ اَنْشَأْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ ۚ ٣١

thumma
ثُمَّ
பிறகு
anshanā
أَنشَأْنَا
நாம் உருவாக்கினோம்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
qarnan
قَرْنًا
தலைமுறையினரை
ākharīna
ءَاخَرِينَ
வேறு ஒரு
(வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் ("ஆது" என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௧)
Tafseer
௩௨

فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اَفَلَا تَتَّقُوْنَ ࣖ ٣٢

fa-arsalnā
فَأَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
fīhim
فِيهِمْ
அவர்களில்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا
இல்லை
lakum
لَكُم
உங்களுக்கு
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
வணங்கத்தகுதியான (வேறு) கடவுள் யாரும்
ghayruhu
غَيْرُهُۥٓۖ
அவனையன்றி
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?
அவர்களில் உள்ள ("ஹூத்" என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம்முடைய தூதராக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?" (என்று கூறினார்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௨)
Tafseer
௩௩

وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَاۤءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۙ مَا هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۙ يَأْكُلُ مِمَّا تَأْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ٣٣

waqāla
وَقَالَ
கூறினர்
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
min qawmihi
مِن قَوْمِهِ
அவருடைய மக்களில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
இன்னும் நிராகரித்தனர்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்யாக்கினர்
biliqāi
بِلِقَآءِ
சந்திப்பை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
wa-atrafnāhum
وَأَتْرَفْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு செல்வத்தை வழங்கியிருந்தோம்
fī l-ḥayati l-dun'yā
فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
உலக வாழ்வில்
مَا
இல்லை
hādhā
هَٰذَآ
இவர்
illā
إِلَّا
தவிர
basharun
بَشَرٌ
மனிதரே
mith'lukum
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
yakulu
يَأْكُلُ
அவர் சாப்பிடுகிறார்
mimmā takulūna
مِمَّا تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிடுவதிலிருந்து
min'hu
مِنْهُ
அதில்
wayashrabu
وَيَشْرَبُ
இன்னும் அவர் குடிக்கிறார்
mimmā tashrabūna
مِمَّا تَشْرَبُونَ
நீங்கள் குடிப்பதிலிருந்து
(ஹூத் நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவைகளையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி ("ஹூத்" நபியை சுட்டிக் காண்பித்து) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனேயன்றி வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௩)
Tafseer
௩௪

وَلَىِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَكُمْ اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۙ ٣٤

wala-in
وَلَئِنْ
aṭaʿtum
أَطَعْتُم
நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
basharan
بَشَرًا
மனிதருக்கு
mith'lakum
مِّثْلَكُمْ
உங்களைப் போன்ற
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
idhan
إِذًا
அப்போது
lakhāsirūna
لَّخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்தான்
ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௪)
Tafseer
௩௫

اَيَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۖ ٣٥

ayaʿidukum
أَيَعِدُكُمْ
அவர் உங்களுக்கு வாக்குறுதி கூறுகிறாரா
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
idhā mittum
إِذَا مِتُّمْ
நீங்கள் மரணித்துவிட்டால்
wakuntum
وَكُنتُمْ
இன்னும் ஆகிவிட்டால்
turāban
تُرَابًا
மண்ணாகவும்
waʿiẓāman
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
annakum
أَنَّكُم
நிச்சயமாக நீங்கள்
mukh'rajūna
مُّخْرَجُونَ
வெளியேற்றப்படுவீர்கள்
நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா? ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௫)
Tafseer
௩௬

۞ هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۖ ٣٦

hayhāta
هَيْهَاتَ
வெகு தூரம்
hayhāta
هَيْهَاتَ
வெகு தூரம்
limā tūʿadūna
لِمَا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்படுவது
அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக் கூடியதன்று). ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௬)
Tafseer
௩௭

اِنْ هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۖ ٣٧

in hiya
إِنْ هِىَ
இது
illā
إِلَّا
தவிர
ḥayātunā
حَيَاتُنَا
நமது வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
namūtu
نَمُوتُ
நாம் இறந்து விடுகிறோம்
wanaḥyā
وَنَحْيَا
இன்னும் நாம் வாழ்கிறோம்
wamā
وَمَا
இன்னும் அல்லர்
naḥnu
نَحْنُ
நாம்
bimabʿūthīna
بِمَبْعُوثِينَ
எழுப்பப்படுபவர்கள்
நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்து விடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௭)
Tafseer
௩௮

اِنْ هُوَ اِلَّا رَجُلُ ِۨافْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ ٣٨

in huwa
إِنْ هُوَ
அவர் இல்லை
illā
إِلَّا
தவிர
rajulun
رَجُلٌ
ஒரு மனிதரே
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினார்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kadhiban
كَذِبًا
பொய்யை
wamā
وَمَا
இல்லை
naḥnu
نَحْنُ
நாங்கள்
lahu
لَهُۥ
அவரை
bimu'minīna
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக
(ஹூத் நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரேயன்றி வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்" என்றார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௮)
Tafseer
௩௯

قَالَ رَبِّ انْصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ ٣٩

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
unṣur'nī
ٱنصُرْنِى
எனக்கு நீ உதவுவாயாக
bimā kadhabūni
بِمَا كَذَّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
அதற்கவர் "என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். நீதான் எனக்கு உதவிசெய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தார். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௯)
Tafseer
௪௦

قَالَ عَمَّا قَلِيْلٍ لَّيُصْبِحُنَّ نٰدِمِيْنَ ۚ ٤٠

qāla
قَالَ
கூறினான்
ʿammā qalīlin
عَمَّا قَلِيلٍ
விரைவில்
layuṣ'biḥunna
لَّيُصْبِحُنَّ
அவர்கள் ஆகிவிடுவார்கள்
nādimīna
نَٰدِمِينَ
கைசேதப்பட்டவர்களாக
அதற்கு இறைவன் "சிறிது பொறுத்திருங்கள்! அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்" என்று கூறினான். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪௦)
Tafseer