وَاِنَّ لَكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةًۗ نُسْقِيْكُمْ مِّمَّا فِيْ بُطُوْنِهَا وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَأْكُلُوْنَ ۙ ٢١
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- fī l-anʿāmi
- فِى ٱلْأَنْعَٰمِ
- கால்நடையில்
- laʿib'ratan
- لَعِبْرَةًۖ
- ஒரு படிப்பினை
- nus'qīkum
- نُّسْقِيكُم
- உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்
- mimmā fī buṭūnihā
- مِّمَّا فِى بُطُونِهَا
- அவற்றின் வயிற்றிலிருந்து
- walakum
- وَلَكُمْ
- இன்னும் உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- manāfiʿu
- مَنَٰفِعُ
- பலன்களும்
- kathīratun
- كَثِيرَةٌ
- அதிகமான
- wamin'hā
- وَمِنْهَا
- இன்னும் அவற்றிலிருந்து
- takulūna
- تَأْكُلُونَ
- நீங்கள் புசியுங்கள்
நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அன்றி, உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௧)Tafseer
وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَ ࣖ ٢٢
- waʿalayhā
- وَعَلَيْهَا
- அவற்றின் மீதும்
- waʿalā l-ful'ki
- وَعَلَى ٱلْفُلْكِ
- கப்பல்கள் மீதும்
- tuḥ'malūna
- تُحْمَلُونَ
- நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௨)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اَفَلَا تَتَّقُوْنَ ٢٣
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- nūḥan
- نُوحًا
- நூஹை
- ilā qawmihi
- إِلَىٰ قَوْمِهِۦ
- அவருடைய மக்களிடம்
- faqāla
- فَقَالَ
- அவர் கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- எனது மக்களே
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- mā
- مَا
- இல்லை
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- min ilāhin
- مِّنْ إِلَٰهٍ
- கடவுள் யாரும்
- ghayruhu
- غَيْرُهُۥٓۖ
- அவனையன்றி
- afalā tattaqūna
- أَفَلَا تَتَّقُونَ
- நீங்கள் அஞ்ச வேண்டாமா?
நிச்சயமாக நாம் "நூஹ்" (நபியை) நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?" என்று கூறினார். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௩)Tafseer
فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَآ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْۙ يُرِيْدُ اَنْ يَّتَفَضَّلَ عَلَيْكُمْۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰۤىِٕكَةً ۖمَّا سَمِعْنَا بِهٰذَا فِيْٓ اٰبَاۤىِٕنَا الْاَوَّلِيْنَ ۚ ٢٤
- faqāla
- فَقَالَ
- கூறினர்
- l-mala-u
- ٱلْمَلَؤُا۟
- தலைவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- min qawmihi
- مِن قَوْمِهِۦ
- அவருடைய மக்களில்
- mā
- مَا
- இல்லை
- hādhā
- هَٰذَآ
- இவர்
- illā
- إِلَّا
- தவிர
- basharun
- بَشَرٌ
- மனிதரே
- mith'lukum
- مِّثْلُكُمْ
- உங்களைப் போன்ற
- yurīdu
- يُرِيدُ
- அவர் நாடுகிறார்
- an yatafaḍḍala
- أَن يَتَفَضَّلَ
- மேன்மை அடைய
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- walaw shāa
- وَلَوْ شَآءَ
- நாடியிருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- la-anzala
- لَأَنزَلَ
- இறக்கி இருப்பான்
- malāikatan
- مَلَٰٓئِكَةً
- வானவர்களை
- mā samiʿ'nā
- مَّا سَمِعْنَا
- நாங்கள் கேள்விப்பட்டதில்லை
- bihādhā
- بِهَٰذَا
- இதை
- fī ābāinā
- فِىٓ ءَابَآئِنَا
- எங்கள் மூதாதைகளில்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோர்களான
அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தம்முடைய மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் மலக்குகளையே அனுப்பி வைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும், ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௪)Tafseer
اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ ٢٥
- in huwa
- إِنْ هُوَ
- அவர் இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- rajulun
- رَجُلٌۢ
- ஓர் ஆடவரே
- bihi
- بِهِۦ
- அவருக்கு
- jinnatun
- جِنَّةٌ
- பைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது)
- fatarabbaṣū
- فَتَرَبَّصُوا۟
- எதிர் பார்த்திருங்கள்
- bihi
- بِهِۦ
- அவருக்கு
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- ḥīnin
- حِينٍ
- ஒரு காலம்
"இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, (இவர் கூறுவதின் உண்மையை) சிறிது காலம் பொறுத்து இருந்து பாருங்கள்" என்றும் கூறினார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௫)Tafseer
قَالَ رَبِّ انْصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ ٢٦
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- unṣur'nī
- ٱنصُرْنِى
- எனக்கு நீ உதவுவாயாக
- bimā kadhabūni
- بِمَا كَذَّبُونِ
- அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
(அதற்கு நூஹ் நபி) "என்னுடைய இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்" என்று பிரார்த்தித்தார். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௬)Tafseer
فَاَوْحَيْنَآ اِلَيْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا فَاِذَا جَاۤءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ فَاسْلُكْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْۚ وَلَا تُخَاطِبْنِيْ فِى الَّذِيْنَ ظَلَمُوْاۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ٢٧
- fa-awḥaynā
- فَأَوْحَيْنَآ
- நாம் வஹீ அறிவித்தோம்
- ilayhi
- إِلَيْهِ
- அவருக்கு
- ani iṣ'naʿi
- أَنِ ٱصْنَعِ
- நீர் செய்வீராக
- l-ful'ka
- ٱلْفُلْكَ
- கப்பலை
- bi-aʿyuninā
- بِأَعْيُنِنَا
- நமது கண்களுக்கு முன்னும்
- wawaḥyinā
- وَوَحْيِنَا
- நமது அறிவிப்பின்படியும்
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- வந்துவிட்டால்
- amrunā
- أَمْرُنَا
- நம் கட்டளை
- wafāra
- وَفَارَ
- பொங்க ஆரம்பித்து விட்டால்
- l-tanūru
- ٱلتَّنُّورُۙ
- அடுப்பு
- fa-us'luk fīhā
- فَٱسْلُكْ فِيهَا
- அதில்/ஏற்றுவீராக
- min kullin
- مِن كُلٍّ
- எல்லாவற்றிலிருந்தும்
- zawjayni
- زَوْجَيْنِ
- ஜோடிகளையும்
- ith'nayni
- ٱثْنَيْنِ
- இரண்டு
- wa-ahlaka
- وَأَهْلَكَ
- இன்னும் உமது குடும்பத்தினரையும்
- illā
- إِلَّا
- தவிர
- man
- مَن
- எவன்
- sabaqa
- سَبَقَ
- முந்திவிட்டதோ
- ʿalayhi
- عَلَيْهِ
- அவன் மீது
- l-qawlu
- ٱلْقَوْلُ
- வாக்கு
- min'hum
- مِنْهُمْۖ
- அவர்களில்
- walā tukhāṭib'nī
- وَلَا تُخَٰطِبْنِى
- இன்னும் என்னிடம் நீர் உரையாடாதீர்
- fī alladhīna ẓalamū
- فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ۖ
- அநியாயக்காரர்கள் விஷயத்தில்
- innahum
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்கள்
- mugh'raqūna
- مُّغْرَقُونَ
- மூழ்கடிக்கப்படுவார்கள்
அதற்கு நாம் அவரை நோக்கி நீங்கள் "நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்யுங்கள். நம்முடைய உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வொரு உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உங்களுடைய குடும்பத்தினரையும் நீங்கள் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள். ஆயினும், எவன் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்களது குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீங்கள் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்" என்று வஹீ அறிவித்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௭)Tafseer
فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ٢٨
- fa-idhā is'tawayta
- فَإِذَا ٱسْتَوَيْتَ
- நீர் ஏறிவிட்டால்
- anta
- أَنتَ
- நீரும்
- waman maʿaka
- وَمَن مَّعَكَ
- இன்னும் உன்னுடன் இருப்பவரும்
- ʿalā l-ful'ki
- عَلَى ٱلْفُلْكِ
- கப்பலில்
- faquli
- فَقُلِ
- கூறுவீராக
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- alladhī najjānā
- ٱلَّذِى نَجَّىٰنَا
- எவன்/எங்களை பாதுகாத்தான்
- mina l-qawmi
- مِنَ ٱلْقَوْمِ
- மக்களிடமிருந்து
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் "அநியாயக்கார இந்த மக்களில் இருந்தும் எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுங்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௮)Tafseer
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِيْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ ٢٩
- waqul
- وَقُل
- இன்னும் கூறுவீராக
- rabbi
- رَّبِّ
- என் இறைவா
- anzil'nī
- أَنزِلْنِى
- என்னை தங்க வைப்பாயாக
- munzalan
- مُنزَلًا
- ஓர் இடத்தில்
- mubārakan
- مُّبَارَكًا
- அருள் நிறைந்த
- wa-anta
- وَأَنتَ
- நீ
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தவன்
- l-munzilīna
- ٱلْمُنزِلِينَ
- தங்க வைப்பவர்களில்
அன்றி "என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக (பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலிலிருந்து) இறக்கி வைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்தியுங்கள்" (என்றும் கூறினோம்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௯)Tafseer
اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ ٣٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- (பல) அத்தாட்சிகள்
- wa-in kunnā
- وَإِن كُنَّا
- நிச்சயமாக நாம் இருந்தோம்
- lamub'talīna
- لَمُبْتَلِينَ
- சோதிப்பவர்களாகவே
(இவ்வாறு மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதித்தபோதிலும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩௦)Tafseer