Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 2

Al-Mu'minun

(al-Muʾminūn)

௧௧

الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ١١

alladhīna yarithūna
ٱلَّذِينَ يَرِثُونَ
சொந்தமாக்கிக் கொள்வார்கள்
l-fir'dawsa
ٱلْفِرْدَوْسَ
ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
ஆகவே, இவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧)
Tafseer
௧௨

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ ۚ ١٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
min sulālatin
مِن سُلَٰلَةٍ
ஈரச்சத்திலிருந்து
min ṭīnin
مِّن طِينٍ
களிமண்ணிலிருந்து
நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதரை களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௨)
Tafseer
௧௩

ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِيْ قَرَارٍ مَّكِيْنٍ ۖ ١٣

thumma
ثُمَّ
பிறகு
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
அவனை நாம் வைத்தோம்
nuṭ'fatan
نُطْفَةً
ஒரு இந்திரியத் துளியாக
fī qarārin
فِى قَرَارٍ
ஒரு தங்குமிடத்தில்
makīnin
مَّكِينٍ
உறுதியான
பின்னர், அதனை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௩)
Tafseer
௧௪

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَأْنٰهُ خَلْقًا اٰخَرَۗ فَتَبَارَكَ اللّٰهُ اَحْسَنُ الْخَالِقِيْنَۗ ١٤

thumma
ثُمَّ
பிறகு
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
l-nuṭ'fata
ٱلنُّطْفَةَ
இந்திரியத் துளியை
ʿalaqatan
عَلَقَةً
ஒரு இரத்தக்கட்டியாக
fakhalaqnā
فَخَلَقْنَا
நாம் படைத்தோம்
l-ʿalaqata
ٱلْعَلَقَةَ
இரத்தக் கட்டியை
muḍ'ghatan
مُضْغَةً
ஒரு சதைத் துண்டாக
fakhalaqnā
فَخَلَقْنَا
நாம் படைத்தோம்
l-muḍ'ghata
ٱلْمُضْغَةَ
சதைத் துண்டை
ʿiẓāman
عِظَٰمًا
எலும்புகளாக
fakasawnā
فَكَسَوْنَا
அணிவித்தோம்
l-ʿiẓāma
ٱلْعِظَٰمَ
எலும்புகளுக்கு
laḥman
لَحْمًا
சதையை
thumma
ثُمَّ
பிறகு
anshanāhu
أَنشَأْنَٰهُ
அவனைப் படைத்தோம்
khalqan
خَلْقًا
படைப்பாக
ākhara
ءَاخَرَۚ
வேறு ஒரு
fatabāraka
فَتَبَارَكَ
மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகியவனாகிய
l-khāliqīna
ٱلْخَٰلِقِينَ
செய்பவர்களில்
பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௪)
Tafseer
௧௫

ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَ ۗ ١٥

thumma
ثُمَّ
பிறகு
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
lamayyitūna
لَمَيِّتُونَ
இறப்பெய்யக் கூடியவர்கள்தான்
(மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே! ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௫)
Tafseer
௧௬

ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ ١٦

thumma
ثُمَّ
பிறகு
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
tub'ʿathūna
تُبْعَثُونَ
எழுப்பப்படுவீர்கள்
அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௬)
Tafseer
௧௭

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَاۤىِٕقَۖ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غٰفِلِيْنَ ١٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
fawqakum
فَوْقَكُمْ
உங்களுக்கு மேல்
sabʿa
سَبْعَ
ஏழு
ṭarāiqa
طَرَآئِقَ
வானங்களை
wamā kunnā
وَمَا كُنَّا
நாம் இருக்கவில்லை
ʿani l-khalqi
عَنِ ٱلْخَلْقِ
படைப்பைப் பற்றி
ghāfilīna
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக
(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவைகளைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௭)
Tafseer
௧௮

وَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِۖ وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِهٖ لَقٰدِرُوْنَ ۚ ١٨

wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءًۢ
மழையை
biqadarin
بِقَدَرٍ
ஓர் அளவின் படி
fa-askannāhu
فَأَسْكَنَّٰهُ
அதை தங்க வைத்தோம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۖ
பூமியில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
ʿalā dhahābin
عَلَىٰ ذَهَابٍۭ
போக்கி விடுவதற்கு
bihi
بِهِۦ
அதை
laqādirūna
لَقَٰدِرُونَ
ஆற்றலுடையவர்கள்தான்
மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதனைப் பூமியில் தங்கும்படியும் செய்கின்றோம். அதனைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௮)
Tafseer
௧௯

فَاَنْشَأْنَا لَكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍۘ لَكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَأْكُلُوْنَ ۙ ١٩

fa-anshanā
فَأَنشَأْنَا
நாம் உருவாக்கினோம்
lakum
لَكُم
உங்களுக்காக
bihi
بِهِۦ
அதன் மூலம்
jannātin
جَنَّٰتٍ
தோட்டங்களை
min nakhīlin
مِّن نَّخِيلٍ
பேரீட்சை மரங்கள்
wa-aʿnābin
وَأَعْنَٰبٍ
இன்னும் திராட்சை செடிகள்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
fawākihu
فَوَٰكِهُ
பழங்கள்
kathīratun
كَثِيرَةٌ
அதிகமான
wamin'hā
وَمِنْهَا
அவற்றிலிருந்து
takulūna
تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிடுகிறீர்கள்
அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கின்றோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய பல கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவைகளில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௯)
Tafseer
௨௦

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَاۤءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ ٢٠

washajaratan
وَشَجَرَةً
இன்னும் ஒரு மரத்தை
takhruju
تَخْرُجُ
உற்பத்தி ஆகக்கூடியது
min ṭūri
مِن طُورِ
மலையிலிருந்து
saynāa
سَيْنَآءَ
ஸினாய்
tanbutu
تَنۢبُتُ
முளைப்பிக்கிறது
bil-duh'ni
بِٱلدُّهْنِ
எண்ணையை
waṣib'ghin
وَصِبْغٍ
சுவையான உணவை
lil'ākilīna
لِّلْءَاكِلِينَ
உண்பவர்களுக்கு
"தூர்ஸீனாய்" மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கின்றோம்.) அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பும்) தருகின்றது. ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨௦)
Tafseer